நீங்கள் குடிப்பது ஒரிஜினல் சரக்கா? போலி சரக்கா? கண்டுபிடிக்க வந்துவிட்டது மொபைல் ஆப்!

சென்னை: மதுவிற்கான தேவை அதிகரித்து வரும் நிலையில், அதில் போலி சரக்கு விற்பனை கிடுகிடுவென உயர்ந்துள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.


நீங்கள் வாங்கும் மதுவின் தரம் எத்தகையது என ஆன்லைனிலேயே சரிபார்க்க முடியும். ஆம், உதாரணமாக, டெல்லியில் விற்கப்படும் மதுவின் தரத்தை, அந்த பாட்டில்களில் உள்ள பார் கோடு அடிப்படையில் நாம் கண்டறிய முடியும். இதற்காக, டெல்லி அரசின் சுங்க வரித்துறை இணையதளம் உள்ளது.

அதில், நீங்கள் வாங்கிய மது பாட்டிலில் உள்ள பார் கோடு எண்ணை குறிப்பிட்டால், அதன் தரம், அதில் உள்ள கலப்படம் உள்ளிட்ட பல அதிர்ச்சிகர தகவல்கள் கிடைக்கும். இதன்படி, டெல்லியில் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் வழியாக விற்கப்படும் பல மதுபானங்கள், போலியான சரக்கு கலந்தவை என தெரிகிறது. 

இதேபோல, #mLiquorSaleCheck என்ற ஸ்மார்ட்ஃபோன் செயலி மூலமாகவும் நீங்கள் குடிக்கும் சரக்கின் தரத்தை கண்டுபிடிக்கலாம் எனக் கூறப்படுகிறது. தேவை காரணமாக, டெல்லியில் போலி சரக்கை கலந்து, உள்ளூர் விற்பனையாளர்கள் விற்று வருவதும் இதன்மூலமாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

நாட்டின் தலைநகர் டெல்லியிலேயே இந்த நிலை என்றால், நம்மூரில் சொல்லவா வேண்டும். எதற்கும் ஒருமுறை நீங்களும் இந்த ஸ்மார்ட்ஃபோன் செயலியை பயன்படுத்தி, உங்களின் சரக்கை பரிசோதித்து பாருங்கள்...