மகாராஷ்டிர மாநிலத்தில் மனைவியின் நடத்தை மீது சந்தேகம் காரணமாக சரமாரியாக கத்தியால் குத்திக் கொன்ற கணவனை போலீசார் கைதுசெய்துள்ளனர்.
மனைவியின் அந்த இடத்தில் கத்தியால் 8 முறை குத்திய கணவன்! அதிர வைக்கும் காரணம்!
பிவாண்டி நகரில் உள்ள மாதா காலனியைச் சேர்ந்தவர் 25 வயது ஆலம் அப்துல் கஃபார் அன்சாரி. இவரும் இவரது மனைவி நஸியாவும் 4 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். ஆனால் ஒரே ஆண்டிலேயே இருவருக்கும் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும் தனது மனைவிக்கு வேறு ஒருவரோடு தொடர்பு இருப்பதாக அன்சாரி சந்தேகப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை இருவருக்கும் தகராறு ஏற்பட்ட நிலையில் ஆத்திரத்துடன் வீட்டை விட்டு வெளியேறிய அன்சாரி மூச்சு முட்ட மது அருந்திவிட்டு போதையுடனும் வெறிபிடித்த ஆத்திரத்துடனும் வீடு திரும்பினார்.
மனைவியுடன் மீண்டும் தகராறில் ஈடுபட்ட அவர், மனைவியை சரமாரியாக கத்தியால் குத்தியதில் நஸியா ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் உடலின் அந்த உறுப்பு உள்ளிட்ட 8 இடங்களில் கத்திக்குத்து பட்ட பலத்த காயங்களாலும் பெருமளவு ரத்தம் வெளியேறியதாலும் நஸியா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது தொடர்பான புகாரின் பேரில் அன்சாரி மீது கொலை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.