தூத்துக்குடியில் கனிமொழியை நிச்சயம் வெற்றி பெறுவேன் என்று தமிழிசை கூறியுள்ளார்.
தூத்துக்குடியில் கனிமொழியை காலி செய்வேன்! தமிழிசை சூளுரை!
சென்னை விமானநிலையத்தில் பாஜக தலைவர் தமிழிசை தனது பேட்டியில் கூறியிருப்பதாவது, தூத்துக்குடியில் கனிமொழியுடனான போட்டியை ஆரோக்கியமான போட்டியாகவே பார்க்கிறேன் , நிச்சயம் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது.
தூத்துக்குடியில் வேலைவாய்ப்பை பெருக்க , ஏற்றுமதியை அதிகரிக்க கனவு கண்டு வருகிறேன். அதற்காக பாடுபடுவேன். தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரம் துரதிஷ்டவசமானது , அதில் எங்களுக்கு நேரடி தொடர்பே கிடையாது . தூத்துக்குடி மக்களுக்கு அமைதியான சூழல் தேவை , மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் மக்களுக்கு தேவையான அனைத்தையும் செய்வோம்.
ஸ்டெர்லைட் விவகாரம் மற்றவர்களுக்கு ஆதரவாகவும் எங்களுக்கு எதிராகவும் இருப்பது போல் ஒரு தோற்றம் உருவாக்கப்படுகிறது ஆனால் அப்படியில்லை. காங்கிரசுக்குள் இருப்பவர்களுக்கு சீட் ஒதுக்கும் பிரச்சனை ஓயவில்லை அதனாலயே கே.எஸ்.அழகிரி போட்டியிடாமல் விட்டுக்கொடுத்திருக்கிறார் .
வேட்பாளர் பட்டியல் வெளியிட்ட பின் இன்னமும் பல பிரச்சனைகள் காங்கிரசுக்குள்ளேயே வரும். எங்களுடைய பிரச்சாரம் வலிமையாக இருக்கும் ஆனால் வலி ஏற்படுத்துவதாக இருக்காது . காங் திமுக கூட்டணிக்கு எதிரான கருத்தை மக்களிடம் சொல்லுவோம்.
திமுகவில் வாரிசுகளுக்கு வாய்ப்பு கொடுத்து தொண்டர்களை தொலைத்லுவிட்டார்கள் அவர்கள் அத்வானியை பற்றி எப்படி பேச முடியும் ? அத்வானியின் வயது மூப்பின் காரணமாகவே சீட் கொடுக்கப்படாமல் இருந்திருக்கலாம். இவ்வாறு தமிழிசை கூறினார்.