குழந்தை, பெரியவர், வயோதிகர், காதலன், காதலி, கணவன், மனைவி என அன்பைப் பகிர பலர் செய்யும் இந்த முத்தமிடும் செயல் காதலர்களுக்கு மிகவும் பரிச்சயமானது.
முத்தத்தின் முக்கியத்துவம்! அதன் அறிய பலன்களே அதன் மகத்துவம்!
முத்தமிடுவது மகிழ்ச்சி ஹார்மோன் என அழைக்கப்படும் டெஸ்டாஸ்டிரோனை அதிகரிக்க உதவும். இதனால் காரணமே இல்லாமல் நாம் சந்தோஷமாக இருப்போம். இது குழந்தைக்கு அதிகமாக சுரக்கும். அதனால்தான் கைக்குழந்தை காரணமே இல்லாமல் சந்தோஷமாக இருக்கும்.
முத்தம் காமத்தின் வகை அல்ல, அன்பின் வெளிப்பாடு என உணர்ந்த ஜோடிகளின் மகிழ்ச்சிக்கும் நிறைவுக்கும் அளவே இருக்காது எனலாம். முத்தமிடுவதால் ஏற்படும் மருத்துவப் பலன்களைப் பார்ப்போம். முத்தமிடுவதால் ரத்த நாளங்கள் விரிவடையும். இதனால் உடல் முழுக்க ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதன் விளைவாக மனஅழுத்தம் குறையும். உடல் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். தலைவலியை போக்கும். அரிப்பு உணர்வை போக்கும். கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவும்.
உதட்டுடன் உதட்டை வைத்து முத்தமிடுவதால் எச்சில் அதிகம் சுரக்கும். இதனால் ஈறுகள் பாதிப்பு தடுக்கப்படும். அடிக்கடி பிரஞ்ச் கிஸ் அடிப்பது(!) உங்கள் தாடை மற்றும் முகத்தசைகள் தளர்வடைவதைத் தடுக்கும். உடல் கலோரிகளை எரிக்க உதவும்.