முன்னாள் அமைச்சர் பழனியப்பன்(அமமுக)வேட்பாளர் உறவினர் மற்றும் திமுக பிரமுகர்கள் இரண்டு பேர் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை
பழனியப்பன் வீட்டில் கட்டு கட்டாக பணம்! டிடிவி தினகரனை நெருங்கும் வருமான வரித்துறை!
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே எக்காண்ட அள்ளி கிராமத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற துணை வட்டாட்சியர் பொல்லியப்பன். முன்னாள் அமைச்சர் பழனியப்பனின் ஆதரவாளர் மற்றும் உறவினரான இவரது வீடுகளில் சோதனை செய்த வருமான வரித்துறை அதிகாரிகள் 25 லட்ச ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர்.
இந்தபணத்திற்கு உரிய ஆவணங்கள் இருப்பதாக தெரிவிக்கபட்டுள்ளதால் ஆவணங்களை கேட்டுள்ளனர் வருமான வரித்துறையினர். இதே போல கும்மனூரிலுள்ள திமுக பிரமுகர் நடராஜ் மற்றும் ஐத்தாண்டஅள்ளி கிராமத்திலுள்ள திமுக பிரமுகர் செல்லப்பன் ஆகியோர் வீடுகளில் சோதனை மேற்கண்டதில் பணம் எதுவும் பிடிப்படவில்லை
இரவு 10 .30 மணியளவில் சோதனையை துவக்கிய வருமான வரித்துறை அதிகாரிகள் விடியற்காலை 4 மணி வரை சோதனையை நடத்தியுள்ளனர். பொல்லியப்பன் தரப்பில் உரிய ஆவணங்களை சமர்த்துவிட்டு பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என வருமானத்துறை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே வருமான வரித்துறையினல் பொல்லியப்பன் வீட்டில் பறிமுதல் செய்த பணம் மற்றும் அரூரில் இரண்டு நாட்களுக்கு முன்னர் பேருந்தில் கேட்பாரற்று கிடந்த பணமும் தினகரன் தொடர்புடையதாக இருக்கலாம் என அதிகாரிகள் கருதுகின்றனர். எனவே அவரை விசாரணைக்கு அழைக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.