கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத தி.மு.க.வை எப்படியும் ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்பதற்காக துர்கா ஸ்டாலின் ஒவ்வொரு கோயிலாகப் போய் பூஜை செய்து வருகிறார். இப்போது துர்கா ஸ்டாலின் கையில்தான் தி.மு.க. வேட்பாளர் பட்டியல் இருக்கிறதாம்.
அறநிலையத்துறை அமைச்சர் துர்கா ஸ்டாலின்? கலாய்க்கும் நெட்டிஷன்கள்.
அந்த பட்டியலை கையில் எடுத்துக்கொண்டுதான் ஒவ்வொரு கோயிலாக பூஜை செய்து வருகிறாராம். கடைசியாக திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் வைத்து பூஜை செய்யப்பட்டிருக்கிறது. இது போக, ஸ்டாலின் ஜாதகத்தின் அடிப்படையில் எந்த நேரத்தில் பட்டியலை ரிலீஸ் செய்ய வேண்டும் எனவும் தேதி, நேரம் குறித்துக் கொடுத்திருப்பதாக பேச்சு.
இந்த உள் விபரங்களை அறிந்த கட்சியின் சீனியர்கள், ‘’ அந்த அம்மா நிமிர்ந்தால், உட்கார்ந்தால் எல்லாமும் ஆஸ்தான ஜோதிடரின் ஆலோசனைப்படித்தான் நடக்கிறது. அந்தளவிற்கு ஆன்மிகத்தில் தீவிர ஈடுபாடு காட்டி வருகிறார். ஆட்சிக்கு வந்தால் பேசாமல் அறநிலையத்துறை அமைச்சராக இவரையே நியமித்து விடலாம்’’ என்கிறார்கள்.
அது சரி, ஆட்சிக்கு வந்தால்தானே என்று கலாய்க்கிறார்கள் நெட்டிஷன்கள்.