எவ்வளவோ ஆசைப்பட்டு மகாராஷ்டிராவில் அஜித்பவார் ஆதரவுடன் அரசமைக்க பா.ஜ.க.. முயற்சி செய்தது. ஆனால், கடைசி நேரத்தில் எல்லாமே புட்டுக்கொண்டது. இந்த நிலையில் மீண்டும் சிந்தியாவுடன் அடுத்த ஆட்டத்தை ம.பி.யில் தொடங்கியுள்ளது மோடி டீம்.
மத்திய பிரதேசத்தில் மோடியின் ஆசை நிறைவேறுமா..? மகாராஷ்டிரா போன்று கவிழ்த்துவிடுமா?
சிந்தியாவின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 22 பேர் பெங்களூருவில் தங்க வைக்கப்பட்டிருந்தார்கள். இதை அறிந்த காங்கிரஸ் கட்சி சஜ்ஜன் சிங் வர்மா உள்ளிட்ட தலைவர்களை அங்கே அனுப்பி, எம்.எல்.ஏ.க்களிடம் பேச வைத்தது.
இதையடுத்து, பலரும் பா.ஜ.க.வில் சேர்வதற்கு தயாராக இல்லை என்று தெரிவித்திருக்கிறார்கள். அதனால், இந்த எம்.எல்.ஏ.க்கள் பலம் குறைவதற்கு வாய்ப்பு உண்டு என்று கருதப்படுகிறது. இந்த விவகாரம் தெரிந்த பிறகே ராகுல் கொந்தளித்தார் என்கிறார்கள்.
இன்று ராகுல் ட்விட்டரில், “மத்தியப் பிரதேசத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் அரசாங்கத்தை குலைக்க, நீங்கள் மும்முரமாக இருந்தபோது, உலகளாவிய எண்ணெய் விலையில் 35% சரிவு ஏற்பட்டதை நீங்கள் கவனிக்கவில்லை. பெட்ரோல் விலையை லிட்டருக்கு 60 ரூபாய்க்குக் குறைப்பதன் மூலம் இந்தியர்களுக்கு கிடைக்கும் நன்மையை தயவுசெய்து வழங்க முடியுமா? இது ஸ்தம்பித்த பொருளாதாரத்தை உயர்த்த உதவும்’’ என்று கிண்டல் செய்திருக்கிறார்.
மகாராஷ்டிரா அவமானத்திற்கு பரிகாரமாக ம.பி. அமையும் என்று பா.ஜ.க. ஆசைப்படுகிறது. அப்படித்தான் அமையுமா அல்லது மீண்டும் அவமானமா என்பது இரண்டு நாட்களில் தெரிந்துவிடும்.