பாரதிய ஜனதா அரசுக்கு எதிராகப் போராடி சிறைக்குச் சென்ற திருமுருகன் காந்தி, வேல்முருகன் மட்டுமின்றி பீம் ஆர்மியின் ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகர் ஆசாத் போன்ற அத்தனை போராளிகளுக்கும் உடலில் ஒரே மாதிரி சிக்கல் தென்படுவது பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
சிறையில் பாதரசம் கலந்த உணவு! வேல்முருகன், திருமுருகன் காந்திக்கு நேர்ந்த கொடூரம்!
![](https://www.timestamilnews.com/uploads/news_image/news_2843_1_medium_thumb.jpg)
அதாவது அரசுக்கு எதிராக புரட்சிகரமான கருத்துக்கள் பேசி சிறைக்குச் செல்பவர்களுக்கு, சிறையில் தனியே உணவு தயாரித்து வழங்குவது நடைமுறையில் இருந்திருக்கிறது. அதன் காரணத்தால் சிறையில் இருந்து வெளியே வந்தபிறகு மேற்கண்ட தலைவர்களுக்கு குடலில் மற்றும் நுரையீரல் தொடர்பான பிரச்னைகள் எழுந்துள்ளன. இதற்கான மருத்துவ விளக்கம் கேட்டபோதுதான் அதிர்ச்சிகரமான பல தகவல்கள் வெளியே வந்திருக்கின்றன.
முன்பு இலங்கையில் போராடி பிடிபடும் தமிழ் போராளிகளுக்கு பாதரசம் கலந்த ஒரு மெல்லக்கொல்லும் விஷத்தை மிகவும் குறைந்த அளவுக்கு உணவில் கலப்பது உண்டு. அதனால் உடனடி மரணம் ஏற்படாது என்றாலும் உடலில் ஒவ்வொரு அவயமாக செயல் இழக்கும் நிலை ஏற்படும்.
அப்படியொரு செயலில் பா.ஜ.க. அரசு தூண்டுதலில் பேரில் மாநில சிறைத்துறை செய்திருக்கிறது என்று போராளிகள் அமைப்பு குற்றம் சாட்டுகிறது. இதனை எதிர்த்துப் போராட அத்தனை அமைப்புகளும் சேர்ந்து முன்வந்தால் மட்டுமே, பிரச்னை தீரும்.