வேட்புமனு தாக்கல் டைம் முடிந்த பிறகு வேட்பு மனுவுடன் வந்த கமல் கட்சி வேட்பாளர்! பிறகு நடந்த செம காமெடி!

வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த பிறகு வேட்புமனுவுடன் வந்த கமல் கட்சி வேட்பாளருக்கு தேர்தல் நடத்தும் அதிகாரி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து அனுப்பினார்.


நடிகர் கமலின் மக்கள் நீதி மையம் கட்சி சார்பில் பெரம்பலூர் தொகுதியில் செந்தில்குமார் என்பவர் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாளான இன்று செந்தில் குமார் தனது வேட்புமனுவை தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

தினமும் காலை 10 மணிக்கு துவங்கும் வேட்புமனுத்தாக்கல் பிற்பகல் 3 மணியுடன் நிறைவடைந்த விடும். இதற்கு இடைப்பட்ட நேரத்தில் வேட்பு மனு தாக்கல் காண நேரத்தைப் பற்றி தேர்தல் நடத்தும் அதிகாரியை சந்தித்து வேட்பாளர்கள் வேட்பு மனுவை வழங்க வேண்டும்.

பிற்பகல் 3 மணிக்கு பிறகு வரும் வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் பெறப்படாது. இந்த நிலையில் வேட்புமனு தாக்கல் கடைசி நாள் வந்தது. ஆனால் பெரம்பலூர் தொகுதியில் கமல் கட்சி சார்பில் போட்டியிடும் செந்தில்குமார் வேட்புமனு தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரவில்லை. மூன்று மணி கடந்த நிலையிலும் அவர் வராத நிலையில் அங்கிருந்த கட்சி நிர்வாகிகள் பதற்றம் அடைந்தனர்.

பிறகு ஒருவழியாக மூன்று இருபது மணிக்கே செந்தில் குமார் தனது ஆதரவாளர்களுடன் வேட்புமனு தாக்கல் செய்ய வருகை தந்தார். ஆனால் நேரம் முடிந்து விட்டதாக கூறி வேட்பாளரை சந்திக்கக் கூட முடியாது என தேர்தல் அதிகாரி கூறிவிட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த கமல் கட்சியின் வேட்பாளர் செந்தில்குமார் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் செய்வதறியாது தவித்து கொண்டிருந்தாள். அவர் எவ்வளவோ கெஞ்சியும் பிரச்சனை செய்து பார்த்தும் வேட்புமனுவை வாங்கவே முடியாது என்று திட்டவட்டமாக கூறிவிட்டனர்.

இதனால் பெரம்பலூர் தொகுதியில் கமல் கட்சி சார்பில் போட்டியிடுவதற்கு வேட்பாளர் இல்லாத நிலை உருவாகியுள்ளது.