கமல் சார் நீங்க கட்சியை வித்துட்ட்டீங்க! கொதிக்கும் மக்கள் நீதி மையம் திருப்பூர் மாவட்ட செயலாளர்!

மக்கள் நீதி மையம் கட்சியை கமல்ஹாசன் விற்பனை செய்து விட்டதாக கூறி அக்கட்சியின் திருப்பூர் மாவட்ட பொறுப்பாளர் புயலை கிளப்பி உள்ளார்.


நடிகர் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளராக இருப்பவர் வெங்கடேசன். இவர் என்ற வாட்ஸ்அப் மூலமாக ஒரு ஆடியோ வெளியிட்டுள்ளார் ‌. 

அந்த ஆடியோவில் வெங்கடேசன் கூறியிருப்பதாவது: கடந்த 30 ஆண்டுகளாக நடிகர் கமலின் நற்பணி மன்றத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகிறேன். இதனால் தான் என்னை திருப்பூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக கமல் நியமித்தார்.

இந்த நிலையில் மக்கள் நீதி மையம் கட்சி சார்பில் திருப்பூரில் போட்டியிட நான் சீட் கேட்டேன். எவ்வளவு செலவு செய்ய முடியும் என்று கேட்டார்கள். 50 லட்சம் ரூபாய் வரை செலவழிக்க தயார் என்று நான் தெரிவித்தேன்.

ஆனால் மக்கள் நீதி மையம் கட்சிக்கு தொடர்பே இல்லாத சந்திர காந்த் என்பவரை திருப்பூர் வேட்பாளராக அறிவித்து உள்ளீர்கள். மாவட்ட பொறுப்பாளராக எனக்கே அந்த சந்திரகாசு யார் என்று தெரியாது.

நீங்கள் கட்சி ஆரம்பித்து உங்கள் கட்சியை பொதுச்செயலாளர் அருணாச்சலம் என்பவரிடமும் துணைத் தலைவரிடமும் என்பவரிடமும் விற்பனை செய்து விட்டீர்கள். அவர்கள் நல்லவர்கள் அல்ல.

தற்போது கட்சி உங்கள் கட்டுப்பாட்டில் இல்லை. இதனால் நான் மக்கள் நீதி மையம் கட்சியில் இருந்து விலகிக் கொள்கிறேன். அதுமட்டுமல்ல திருப்பூர் தொகுதியில் சுயேச்சையாகவும் நான் போட்டியிட போகிறேன்.

இவ்வாறு ஆடியோவை வெளியிட்ட கமல் தரப்பை அதிர்ச்சி அடைய வைத்துள்ளார் திருப்பூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வெங்கடேசன். அதுமட்டுமல்லாமல் மக்கள் நீதி மையம் கட்சியில் இருந்து தன் விலகி விட்டதாகவும் கூறியுள்ளார்