காஞ்சி காமாட்சி கோவிலில் தாடியுடன் சுற்றிய முஸ்லீம்கள்! அவர்கள் குறித்து பரவிய அபாண்டம்! தற்போது தெரிய வந்த உண்மை!

காஞ்சிபுரத்திற்கு சுற்றுலா வந்த வெளிநாட்டவர்களை தீவிரவாதிகள் என அவர்களின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பரப்பியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த சில தினங்களுக்கு முன்னர் வங்கதேசத்தைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் சுற்றுலாவிற்காக காஞ்சிபுரத்தில் உள்ள காமாட்சியம்மன் கோவிலுக்கு வந்துள்ளனர்.அப்போது அவர்களை பார்த்த சிலர் தீவிரவாதிகள் என எண்ணி அவர்களின் புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பதிவிட்டு எச்சரிக்கையுடன் இருக்குமாறு தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து இந்த புகைப்படமானது சமூக வலைதளங்களில் வெகுவாக பரவி வரும் அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் இதுகுறித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்திய போது அவர்கள் வங்கதேசத்தைச் சேர்ந்த கான் மற்றும் அப்துல்லா என்பவர்கள் என்பதை உறுதி செய்தனர். பின்னர் அவர்கள் இருவரும் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக வந்ததாகவும் சுற்றுலாவுக்காக காஞ்சிபுரத்தில் உள்ள கோவில்களுக்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில் அவர்களை தீவிரவாதிகள் என சமூக வலைத்தளத்தில் புகைப்படங்களை வெளியிட்டது பொய்யான தகவல் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவர்களை அவர்கள் இருவரும் தனது சொந்த நாட்டிற்கு திரும்பி சென்றுவிட்டனர். இதையடுத்து இந்த வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் எனவும் இது வெறும் பொய்யான தகவல் எனவும் தெரிவித்துள்ளனர்.