கணவன் வீட்டு முன் கர்ப்பிணி பெண் தர்ணா! அதிர வைக்கும் காரணம்!

கணவனை மீட்டு தரக்கோரி 3 மாத கர்பிணி பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். கோவையிலுள்ள நாசிபுரத்தை சேர்ந்தவர் இந்த பெண். இவர் சரவணம்பட்டியை சேர்ந்த அர்ஜுன் என்பவரை கடந்த ஒரு ஆண்டாக காதலித்து வந்தார். இதனையடுத்து இருவரும் விருப்பப்பட்டடு வீட்டிற்கு தெரியாமல் ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர் . இந்த பெண் திருமணத்திற்கு முன்பே கர்பமானது குறிப்பிடத்தக்கது.


இவர்களது திருமணம் கடந்த பிப்ரவரி மாதம் பெற்றோருக்கு தெரியாமல் நடைபெற்றது.  பின்பு இருவரும் சித்தூரில் வாழ்ந்துவந்துள்ளனர். இதற்கிடையே அர்ஜுனின் பெற்றோருக்கு இந்த திருமணம் பற்றிய உண்மைகள் தெரியவந்துள்ளது.  அர்ஜுனின் பெற்றோர் இருவரையும் பிரிக்க திட்டமிட்டு அவரை சரவணம்பட்டிக்கு தனியாக வரும்படி கடந்த மார்ச் மாதம் அழைத்துள்ளனர்.


அர்ஜுனும் பெற்றோரை காண சென்றுள்ளார். சென்ற இடத்தில் அர்ஜுனை தனது பெற்றோர் தன் மனைவியுடன் சேர்ந்து வாழ அனுமதிக்கவில்லை , மேலும் அவரை ஒரு தனி அறையில் வைத்து பூட்டியுள்ளனர்.


பெற்றோரை காண சென்ற தனது கணவர் இன்னும் வீடு  திரும்பவில்லையே என்ற கவலையோடு இந்த பெண்ணும் இருந்திருக்கிறாள்.  திடிரென்று ஒருநாள் இந்தபெண்ணிற்கு சந்தோஷ் இடமிருந்து ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது.  அதில் அவரை பெற்றோர் அடைத்துவைத்துள்ளதாகவும் அதனால் தான் அவரால் வர இயலவில்லை என்றும் கூறப்பட்டிருந்தது.


இது அந்த  பெண்ணிற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடனே அந்த பெண் போலீஸ் -இல் புகார் அளித்துள்ளார். ஆனால்  சந்தோஷ் வீட்டார் இந்த புகாரை மதித்து போலீஸ்க்கும் ஒத்துழழைப்பு தரவில்லை. ஆகவே அந்த பெண் தன் கணவர் சந்தோஷ் வீட்டின் முன் தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். சந்தோஷ் வீட்டார் அந்த பெண்ணின் கருவை கலைக்க கோரி இந்த பெண்ணை வற்புறுத்தியுள்ளனர்.  மேலும் சந்தோஷிற்கு வேறு ஒரு திருமணம் செய்து வைக்கவும் திட்டமிட்டுள்ளனர்.