கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மனைவியை கொன்று விட்டு காணாமல் போய் விட்டதாக நாடகம் ஆடிய கணவர் போலீசாரிடம் சிக்கிக் கொண்டார்.
நடத்தையில் மாற்றம்! தட்டிக் கேட்டேன் சண்டையிட்டாள்! கல்லால் அடித்து கொன்றேன்! மனைவி கொலை குறித்து கணவன் பகீர் வாக்குமூலம்!
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த பொன்னாபுரத்தில் சக்திவேல் கவுசல்யா தம்பதி வாழ்ந்து வந்தனர். சக்திவேல் பூச்சி மருந்து அடிக்கும் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு திருமணம் ஆகி 8 ஆண்டுகள் ஆகி 7 வயதில் மகள் உள்ளார்.
இந் நிலையில் மனைவி கவுசல்யா காணாமல் போய்விட்டதாக கடந்த 7ம் தேதி சக்திவேல் போலிசாரிடம் புகார் அளித்தார். இதை அடுத்து வழக்குப் பதிந்த போலுசார் அவரை தீவிரமாக தேடி வந்தனர். அக்கம் பக்கத்தினரிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு வரும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.
இதனால் போலீசாரின் சந்தேகம் சக்திவேல் பக்கம் திரும்பியது. பின்னர் போலீசாரின் தங்களது பாஷையில் மேற்கொண்ட விசாரணையில் அனைத்து உண்மையையும் வாக்கு மூலமாக தெரிவித்துள்ளார் சக்திவேல்.
இதை அடுத்து சக்திவேல் கொடுத்த தகவலின் பேரில் சாக்குப் பையில் கட்டி கிணற்றில் வீசப்பட்ட கவுசல்யாவின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
இது குறித்து சக்திவேல் போலீசாரிடம் தெரிவித்த போது பூச்சி மருந்து அடித்த இடத்தில்தான் முதலில் கவுசல்யாவை சந்தித்ததாகவும் அப்போதே என்னுடைய விருப்பத்தை தெரிவித்து அவளை திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிவித்தார். ஆனால் திருமணம் ஆன சில வருடங்களில் கவுசல்யாவின் நடத்தையில் மாற்றம் இருந்ததாகவும் இது குறித்து நான் கேட்கும் போதெல்லாம் தன்னுடன் சண்டையிட்டதாகவும் கூறினார்.
இதனால் தங்களுக்குள் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் தெரிவித்தார் சக்திவேல். இந்நிலையில் கடந்த ஜூலை 26ம் தேதி எங்களுக்குள் ஏற்பட்ட சண்டை கைகலப்பாக மாறியது என தெரிவித்த சக்திவேல், அப்போது நான் அடிக்க முயன்றபோது என்னிடம் இருந்து தப்பிக்க முய்னற கவுசல்யா மீது கல் வீசியும் பின்னர் அவர் மயங்கி விழுந்த பின் கழுத்தை நெரித்து கொலை செய்ததாகவும் ஒப்புக் கொண்டார் கணவர் சக்திவேல்.
பின்னர் மனைவியின் சடலத்தை சாக்குப் பையில் கட்டி அருகில் உள் பாழுங் கிணற்றில் போட்டுவிட்டு விட்டு காணாமல் போய்விட்டதாக போலீசில் புகார் அளித்ததாக ஒப்புக்கொண்டார் கணவர். தாய் இறந்து விட தந்தை ஜெயிலுக்கு செல்ல 7 வயது மகள் ஆதரவின்றி தவிக்கிறது.