லாட்டரி அதிபர் மார்ட்டின் உதவியாளர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார்.
லாட்டரி அதிபர் மார்ட்டின் உதவியாளர் மர்ம மரணம்! காரமடையில் சடலம் மீட்பு!
பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டின் வீடு அலுவலகம் உள்ளிட்ட 70 இடங்களில் கடந்த 2 நாட்களாக சோதனை நடைபெற்று வருகிறது. கோவையில் உள்ள லாட்டரி மார்ட்டினின் கார்ப்பரேட் அலுவலகத்திலும் சோதனை தொடர்கிறது. அங்கு நடைபெற்ற சோதனையின்போது லாட்டரி மார்ட்டின் உதவியாளர் பணியிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டனர்.
விசாரணையின்போது தொடர்ந்து கேட்ட கேள்விகளையே வருமான வரித்துறை அதிகாரிகள் கேட்டதாகவும் அதற்கு பதில் அளித்த போதும் அதிகாரிகள் விடாமல் பழகியதாகவும் சொல்கிறார்கள். இதனால் விசாரணையின்போதே பழனி தனது கைகளை கத்தியால் அறுத்து கொண்டதாகவும் இதனைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் கோவை காரமடையில் உள்ள சதுப்பு நிலம் நிறைந்த ஒரு இடத்தில் ஒரு குகை ஒன்று உள்ளது. அங்கு மார்ட்டின் உதவியாளர் பழனியின் உடல் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விரைந்து சென்ற போலீசார் பழனியின் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
வருமான வரித் துறை விசாரணை நடைபெற்று வரும் நிலையில் லாட்டரி அதிபர் மார்ட்டின் உதவியாளர் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.