முதலில் அண்ணி பிறகு அவரது ஆண் நண்பர்! மதுரையில் கொழுந்தனார் நடத்திய வெறி ஆட்டம்! பதற வைக்கும் காரணம்!

மதுரை மாவட்டத்தில் அடிமைப் போல் சிக்கியிருந்த பெண் அங்கிருந்து தப்பித்து திருமணம் செய்து கொள்ள உதவிய பாவத்திற்காக ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.


மதுரை ஆத்திக்குளம் பகுதியை சேர்ந்த துரைப்பாண்டி என்பவரின் மகன் குருநாதசேதுபதி, 2 நாட்களுக்கு முன்னர் ஆயுதப்படை மைதானம் அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

போலீஸ் நடத்திய விசாரணையில் சிம்மக்கல் அனுமன் கோவில் படித்துறையில் அரிவாள் தாக்குதலுக்குள்ளான மகேஸ்வரிக்கு உதவியதால்தான் குருநாதசேதுபதி கொல்லப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் தெரிவிக்கையில் முடக்கத்தான் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவரின் கட்டுப்பாட்டில் இருந்து வந்துள்ளார் மகேஸ்வரி. பின்னர் எப்படியோ அங்கிருந்து தப்பித்து உறவினர் கவுதம் என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர்களின் திருமணத்திற்கு உதவியதாக கவுதமின் நண்பர் குருநாத சேதுபதி கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

கொலை தொடர்பாக தலைமறைவான ஜெயக்குமார், மகேஸ்வரியின் சகோதரி பஞ்சவர்ணம் உள்பட போலீசார் தேடிவந்த நிலையில் அவர்கள் அனைவரும் சிலைமான் அருகே பூஞ்சுத்தி கிராமத்தில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதை தொடர்ந்து அங்கு விரைந்து சென்ற போலீசார் கொலை கும்பலை மடக்கிப் பிடித்தனர். தொடர்ந்து ஜெயக்குமார், பஞ்சவர்ணம், அம்பிகாவதி, விஜயபாண்டி, ரமேஷ், விக்னேஷ், கோடி கிருஷ்ணா, முனீஸ்வரன், ராஜ்மோகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. ஒருவர் பாதிக்கப்படும்போது போலீசாரின் கவனத்திற்கு கொண்டு சென்று உதவி இருந்தால் குருநாதசேதுபதி கொல்லப்பட்டிருக்க வாய்ப்பில்லை. பெண்ணுக்கு உதவிய ஒரே காரணத்தால் உயிரை இழந்துள்ளார்.