ஒட்டிய கன்னம்..! வாடிய முகம்..! இறுகிய கண்கள்..! கிடுகிடு எடை குறைவு..! பரிதாப நிலையில் 74 வயது ப.சிதம்பரம்!

டெல்லி: முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் சிறையில் வாடியதால், 4 கிலோ எடை குறைந்துள்ளார்.


ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம்  கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சில நாள் முன்பு நடைபெற்ற விசாரணையின்போது, அவர் உச்ச நீதிமன்றத்திற்கு ஆஜராக அழைத்து வரப்பட்டார். அதில், 74 வயதாகும் சிதம்பரம் மிகவும் மெலிந்து பஞ்சத்தில் அடிபட்ட பரதேசி போல காட்சியளித்தார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வரும் சூழலில், சிதம்பரத்தின் உடல்நிலை மிக மோசமாக உள்ளதென்று, அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வாதாடினார்.  

குளிர்காலம் என்பதால், நாடு முழுக்க டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதில் இருந்து பாதுகாக்கவும், 74 வயது முதியவர் என்பதால் உடல்நலத்தில் அக்கறை செலுத்தவும் தனது கட்சிக்காரர் சிதம்பரத்திற்கு நீதிமன்றத்தில் ஜாமீன் வழங்க வேண்டும். ஏற்கனவே அவர் 4 கிலோ எடை குறைந்து, மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளார், என அவரது சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல் தெரிவித்தார்.  

எனினும், சிதம்பரம் செல்வாக்கு மிகுந்த நபர் என்பதால் சாட்சியங்களை எளிதாகக் கலைத்துவிடுவார் என, சிபிஐ தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சிதம்பரத்தின் ஜாமின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.