மோடி துறவியாக வேண்டும்.

இதுவே மக்களின் தீர்ப்பு


மீண்டும் மூன்றாவது முறையாக 400 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் கனவில் இருந்த மோடி இப்போது கூட்டணிக் கட்சிகளின் தயவில் ஆட்சி நடத்தும் அவலம் நேர்ந்துள்ளது.
அதுவும் வாரிசு அரசியலை எதிர்த்துப் பேசிய மோடிக்கு வாரிசு அரசியலான சந்திரபாபு நாயுடு கை கொடுக்க வேண்டியிருக்கிறது. சந்திரபாபு நாயுடுக்கு இண்டியா கூட்டணியில் இருந்தும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் நிலையில், அவர் தன்னுடைய தெளிவான நிலைப்பாட்டை அறிவித்திருக்கிறார்.
அதாவது, ‘இப்போது நான் தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் அங்கம் வகிக்கிறேன். இன்று நடக்கும் என்டிஏ கூட்டணியின் கூட்டத்துக்கு செல்கிறேன்.” என்று கூட்டணி குறித்து தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளார் சந்திரபாபு நாயுடு. இதன்மூலம் பாஜக கூட்டணி ஆட்சி அமைவது உறுதியாகியுள்ளது. பிரதராக மோடி பதவி ஏற்பதற்கு தடை இல்லை.
ஆனால், அரசியல் விமர்சகர்கள், ‘’இந்திய மக்கள் ஒட்டுமொத்தமாக பிரதமர் நரேந்திர மோடியை ஒதுக்கியிருக்கிறார்கள். குறிப்பாக அவருக்கு பேராதரவு கொடுத்துவந்த வட இந்திய மக்கள் அவருடைய தலைமை வேண்டியதில்லை என்று கூறுவது போன்று தெளிவாக வாக்களித்திருக்கிறார்கள். இந்தியா முழுமைக்குமான தேர்தல் முடிவுகளைப் பார்க்கும் போது, அவர்கள் ஒரு புதிய பிரதமரை எதிர்பார்க்கிறார்கள் என்பது உறுதியாகிறது.
குறிப்பாக மத ரீதியில் இந்திய மக்களைப் பிரித்துப் பேசியதற்கு ஆதரவு கிடைக்கவில்லை. 2014ம் ஆண்டு தன்னை மக்கள் சேவகர் என்று சொல்லிக்கொண்ட நரேந்திர மோடி இப்போது தன்னை தெய்வப் பிறவி என்று கூறிக்கொள்ளும் அளவுக்கு மதவெறி பிடித்து அலைகிறார். ஆகவே, அவருக்கு பக்தி மார்க்கம் பிடித்திருக்கிறது என்றால் அவர் துறவியாக செல்ல வேண்டும் என்பதற்காகவே பா.ஜ.க.வை தோற்கடித்திருக்கிறார்கள். மக்கள் தீர்ப்புக்குத் தலை வணங்கி மோடி இனி புதிய ஒரு நபருக்கு கட்சியில் வழி விட்டு துறவு வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டும்’ என்கிறார்கள்.
அதேநேரம், ‘பா.ஜ.க.வுக்கு தனியாக 240 தொகுதிகளாவது கிடைத்திருக்கிறது என்றால், அதற்கு மோடியின் தனிப்பட்ட செல்வாக்கே காரணம். அவர் இல்லையென்றால் இந்த வாக்கும் கிடைத்திருக்காது’ என்கிறார்கள்.
இனி, மோடி தான் முடிவு செய்ய வேண்டும்.