ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 28 வருடங்களாக சிறைவாசம் அனுபவிக்கும் நளினியின் மகளுக்கு தற்போது திருமணம் செய்து கொள்வதில் விருப்பம் இல்லை என தெரியவந்துள்ளது.
அவசர கல்யாணம்! அடம்பிடிக்கும் மகள் ஹரித்ரா! டென்சனில் நளினி!
ராஜீவ் கொலை வழக்கில் வேலூர் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் நளினி தன்னுடைய மகளின் திருமண ஏற்பாட்டிற்காக பரோல் கேட்டு விண்ணப்பித்திருந்தார். அவருக்கு நீதிமன்றம் 30 நாட்கள் பரோல் வழங்கி விடுவித்திருந்தது.
இந்நிலையில் லண்டனில் இருக்கும் நளினியின் மகள் ஹரித்ரா வருவதற்கு காலதாமதம் ஆனதால் மேலும் பரோல் கேட்டு விண்ணப்பம் அளிக்கப்பட்டு மீண்டும் 3 வாரங்கள் பரோல் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் மேலும் ஒருமாதம் பரோல் வழங்குமாறு நளினி அளித்த மனு நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டது.
இந்நிலையில் தாயும், தந்தையும் விடுதலையான பிறகே திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக ஹரித்ரா தரப்பில் தகவல் வர அதற்கு நளினி எதிர்ப்பு தெரிவித்து உடனடியாக இந்தியா வருமாறு கூறியிருந்தார்.
இதுகுறித்து நளினியின் வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்த தகவலில் உறவினர்கள் சிலர் இந்தியா வர விசா கிடைக்கவில்லை எனவும், முருகனுக்கும் பரோல் கிடைக்க தாமதம் ஆகும் என்பதால் திருமணம் தள்ளிப் போவதாக தெரிவித்தார்.
மேலும் அதுவரை ஏன் காத்திருக்க வேண்டும் என மகளுக்கு திருமணம் செய்ய நளினி முடிவெடுத்ததாக புகழேந்தி தெரிவித்தார். இந்நிலையில் 51 நாட்கள் பரோல் முடிந்ததை அடுத்து வேலூர் சிறைக்கு திரும்பினார் நளினி.
நளினியின் மகள் ஹரித்ரா ஒரு ஈழத்தமிழரைத்தான் திருமணம் செய்ய விரும்புவதாக ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.