நேர் கொண்ட பார்வை திரைப்படத்தின் அட்வான்ஸ் புக்கிங் துவங்கியுள்ள நிலையில் பெரிய அளவில் ரசிகர்கள் டிக்கெட் வாங்க ஆர்வம் காட்டவில்லை.
நேர்கொண்ட பார்வை அட்வான்ஸ் புக்கிங் டல்! டிக்கெட் வாங்க ஆள் இல்லை! அதிர்ச்சியில் போனி கபூர்!
அமிதாப் பச்சன் – டாப்சி நடித்துள்ள பிங்க் படத்தின் ரீமேக்காக நேர் கொண்ட பார்வை தமிழில் உருவாகியுள்ளது. அமிதாப்பச்சன் வேடத்தில் அஜித் நடித்துள்ளார்.
அஜித்தின் ஸ்டார் வேல்யூவுக்காக பிங்க் படத்தின் ஒரிஜினல் கதையில் சில மாற்றங்களை செய்துள்ளார்கள். படத்தில் அஜித்திற்கு ஜோடியாக வித்யா பாலனை இணைத்துள்ளார். ஒரிஜினல் இந்தி படத்தில் அமிதாப்பிற்கு மனைவி உண்டு. ஆனால் அதிக காட்சிகள் கிடையாது.
இப்படி தமிழுக்கு தேவைப்படும் என்று நேர்கொண்ட பார்வை படத்தில் சண்டை காட்சிகளும் உள்ளன. ஆனாலும் கூட நேர்கொண்ட பார்வை திரைப்படம் கோர்ட் ரூம் டிராமா வகையை சேர்ந்தது என்பதால் மசாலா படத்திற்கு உரிய எதிர்பார்ப்பு இல்லை.
இந்த நிலையில் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரில் நேர்கொண்ட பார்வையின் அட்வான்ஸ் புக்கிங் தொடங்கியது. அஜித்தின் விஸ்வாசம் படத்திற்கு இருந்த எதிர்பார்ப்பு நேர்கொண்ட பார்வை படத்திற்கு இல்லை என்பது அட்வான்ஸ் புக்கிங் ஓபனாகும் போதே தெரிந்தது.
விஸ்வாசம் படத்திற்கு புக்கிங்துவங்கிய சில மணி நேரங்களில் சென்னையில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் அனைத்து காட்சிகளும் புல்லானது. ஆனால் நேர்கொண்ட பார்வைக்கு அப்படி பெரிய அளவில் புல் ஆகவில்லை. ஆனால் டீசன்டாக புக்கிங் சென்று கொண்டிருப்பதாக திரையரங்க உரிமையாளர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது.
ஆனால் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் சிலரோ நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் அட்வான்ஸ் புக்கிங் செம டல் என்றே கூறுகின்றனர். இதனால் தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் விநியோகஸ்தர்கள் போட்ட பணத்தை எடுக்க முடியுமா என்று யோசிக்க ஆரம்பித்துள்ளனர்.