அடுத்த வாரம் பிரசவம்..! சாலையோரம் சடலமாக கிடந்த நிறைமாத கர்ப்பிணி! திண்டுக்கல் பயங்கரம்! அதிர வைத்த காரணம்!

திண்டுக்கல் அருகே சாலையோரம் கர்ப்பிணி பெண் உயிரிழந்து கிடந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.


திண்டுக்கல் அருகிலுள்ள வேடசந்தூர் பகுதியை சேர்ந்தவர் சுஷ்மிதா. நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் இவர் நேற்று அருகில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். மாலை நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால், குடும்பத்தினர் சுஷ்மிதாவை தொடர்பு கொள்ள முயற்சித்தும் பலனளிக்கவில்லை.  

இதனை அடுத்து அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் சுஷ்மிதாவை தேடிவந்த காவல்துறையினர், நேற்று கவுண்டச்சிபட்டி அருகே சாலையோரம் சடலமாக கண்டெடுத்துள்ளனர். 

சுஷ்மிதா கழுத்தில் போட்டிருந்த ஐந்து சவரன் தங்க சங்கலி காணவில்லை. உடலில் வேறு எங்கும் காயமில்லை. ஆதலால் இவர் கொலை செய்யப்பட்டுள்ளாரா? இல்லை, இவரிடம் வழிப்பறி செய்யும் போது கீழே விழுந்து இறந்துள்ளாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.