நான் அவனது விதவை மனைவியாக வாழ விரும்பவில்லை..! நிர்பயா குற்றவாளியின் மனைவி எடுத்த அதிரடி முடிவு!

நிர்பயா குற்றவாளிகளில் ஒருவனான அக்‌ஷய் குமார் சிங் மனைவி புனிதா கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று தர மனு தாக்கல் செய்துள்ளார்.


நிர்பயா பாலியல் ரீதியாக வன்புணர்வு செய்யபட்ட வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்த நிலையில், இதுவரை சுமார் 3 முறைக்கும் மேலாக தூக்கு கடைசி தண்டனை ஒத்தி வைக்கபட்டது அனைவரும்.அறிந்த விடயம் தான்.

வரும் மார்ச் 20 ஆம் தேதி 4 நிர்பயா குற்ற வாளிகளுக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்ற உத்தரவிடபட்ட நிலையில், மீண்டும் 4 குற்றவாளிகளில் ஒருவன் அக்‌ஷய் குமார் சிங் மனைவியான புனிதா, நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.

அதன்படி ,தனது கணவர் அப்பாவி எனவும், அவர் இறந்த பின்னர் தான் விதவையாக வாழ விரும்பவில்லை எனவே அவர் இறப்பதற்க்கு முன்னதாகவே அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று தர வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் வரும் 19 ஆம் தேதிக்குள்ளாக மனுவை விசாரிப்பதாக கூறியுள்ளது. மேலும்.அக்‌ஷய் குமார் மீது பாலியல் குற்றம் மற்றும் கொலை வழக்கு பதிவு செய்யபட்டு உள்ளதால் விவாகரத்து பெற மனைவி புனிதா க்கு சட்டபடி உரிமை உள்ளத்காக வழக்கறிஞர் கருத்து தெறிவிக்கின்றனர்.