அம்மா உணவகமாக மாறிய 1 ரூபாய் உணவகம்

என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 36



சைதை துரைசாமி தன்னுடைய சொந்த செலவில் நடத்திவந்த மலிவு விலை உணவகத்தின் பெயரே முதலில் மாநகராட்சி மூலம் தொடங்கப்பட்ட உணவகங்களுக்கு சூட்டப்பட்டிருந்தது. அன்றைய முதல்வர் ஜெயலலிதா, 2013ம் ஆண்டு மார்ச் 19ம் தேதி சென்னையில் தொடங்கிவைத்த 9 உணவகங்களும் மலிவு விலை உணவகம் என்றே அழைக்கப்பட்டது.
இந்த உணவகம் யாரும் எதிர்பார்க்காத வகையில் மிகப்பெரும் வெற்றி அடைந்தது. எங்கிருந்தோ எல்லாம் மக்கள் தேடி வந்து சாப்பிட்டுச் சென்றார்கள். 1 ரூபாய் உணவகம் என்று மக்களே ஒரு பெயர் வைத்தது மட்டுமின்றி உணவின் சுவை, தரம் ஆகியவற்றை பாராட்டினார்கள். இந்த பாராட்டு முழுவதும் புரட்சித்தலைவி ஜெயலலிதாவுக்குச் சேர வேண்டும் என்று ஆசைப்பட்டார் சைதை துரைசாமி.
எனவே, மார்ச் 23-ம் தேதி, மலிவு விலை உணவகத்தின் பெயரை, ‘அம்மா உணவகம்’ என்று மாற்றி, மாநகராட்சியில் மேயர் சைதை துரைசாமி தீர்மானம் நிறைவேற்றினார்.
அம்மா உணவகம் என்ற பெயருடன், பச்சை நிற விளம்பரப் பலகை இருக்கும் இடங்களில் எல்லாம் மக்கள் கூட்டம் மொய்க்கத் தொடங்கியது. மக்களுக்கு உண்மையாகவே பயன் தரும் ஒரு சிறப்பான திட்டம் நிறைவேறி இருக்கிறது என்று முதல்வர் ஜெயலலிதா, மேயர் சைதை துரைசாமிக்கு பாராட்டு தெரிவித்தார். அதோடு, விரைவில் தமிழகம் முழுவதும் அம்மா உணவகம் திறக்க வேண்டும் என்றும் உத்தரவு போட்டார். அம்மா உணவகம் என்று சைதை துரைசாமி முதன்முதலாக பெயர் சூட்டிய பின்னரே, மற்ற அமைச்சர்களும் அம்மா என்ற பெயரில் பல்வேறு திட்டங்களை அறிவிக்கத் தொடங்கினார்கள்.
இந்த நேரத்தில் மேயராக இருந்த சைதை துரைசாமிக்கு வித்தியாசமான கோரிக்கை ஒன்று வந்தது.
- நாளை பார்க்கலாம்.