ஆயிஷாவாக மாற்றப்பட்ட ஜக்ஜித் கவுர்! கதறும் பெற்றோர்! வெளியான அதிர்ச்சி வீடியோ!

கராச்சி: சீக்கிய பெண் கடத்தப்பட்ட விவகாரத்தில் அவரது குடும்பத்தினர் தற்கொலை செய்துகொள்வோம் என மிரட்டல் விடுத்துள்ளனர்.


பாகிஸ்தானின், லாகூர் நகரில் சீக்கிய மதத்தைச் சேர்ந்த இளம்பெண் ஜக்ஜித் கவூரை சமீபத்தில் முஸ்லீம் ஆண் ஒருவர் கடத்திச் சென்று, கட்டாய மதமாற்றம் செய்து, திருமணம் செய்துகொண்டார். அந்த பெண்ணின் பெயர் தற்போது ஆயிஷா என மாற்றப்பட்டுள்ளது.

தங்களது மகளை கடத்திச் சென்ற முஸ்லீம் நபர் மீது சம்பந்தப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தும், உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இத்தனைக்கும் அந்த பெண்ணின் தந்தை பாகிஸ்தானில் உள்ள சீக்கிய மதத் தலைவர்களில் முக்கியமான நபர் எனக் கூறப்படுகிறது.

இருந்தும் தற்போது இந்தியா, பாகிஸ்தான் இடையே நிலவும் அரசியல் மோதல் காரணமாக இவ்விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு அழுத்தம் தர முடியாத நிலை உள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் குடும்பத்தினர் வீடியோ ஒன்றை சமூக ஊடகங்களில் வெளியிட்டு, இதில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தலையிட வலியுறுத்தியுள்ளார். இல்லை எனில், குடும்பத்தோடு தீக்குளித்து தற்கொலை செய்துகொள்வோம் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர். 

இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக, இந்திய வெளியுறவு அமைச்சகமும் கண்டனம் தெரிவித்துள்ளது. உரிய நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட இளம்பெண்ணை மீட்க வலியுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல, பஞ்சாப் மாநில முதல்வர் அமரீந்தர் சிங்கும், இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கும்படி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.