தனியறையில் 14 வயது மாணவனுடன் ஸ்போர்ட்ஸ் டீச்சர் செக்ஸ் அத்துமீறல்! பிறகு நேர்ந்த விபரீதம்!

பூனே அருகே 14 வயது மாணவனிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட விளையாட்டு ஆசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர்.


புனேவின் புறநகர் பகுதியான நிக்தி பிரதிகரன் என்ற இடத்தில் உள்ள பிரபல பள்ளியில் விளையாட்டு ஆசிரியராக பணியாற்றுபவர்  அனுராக ஹிங்கே. இவர்  கடந்த ஜனவரி மாதம் 14 வயது மாணவனை விளையாட்டு அறைக்கு வரச் சொன்னதாகக் கூறப்படுகிறது.

அங்கு சென்ற சிறுவனிடம் அவர் பாலியல் ரீதியாக அத்துமீறி நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து நடந்ததை வெளியில் எவரிடமாவது தெரிவித்தால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. ஆனால் பாதிக்கப்பட்ட சிறுவன் தனக்கு நேர்ந்தது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்ததை அடுத்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது 

இது தொடர்பாக விசாரணை செய்து வந்த போலீசார் ஆசிரியர் அனுராக் ஹிங்கேவை அண்மையில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

இதனிடையே மும்பை மலாடில் திரைப்படத் தயாரிப்பாளர் ஒருவரும் இசையமைப்பாளர் ஒருவரும் தன்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாக மாடல் பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் அவர்களை போலீசார் கைது செய்தனர். தயாரிப்பாளரான நாகர் என்பவரும் இசையமைப்பாளரான வஹி தனக்கு திரைப்படத்தில் வாய்ப்பு வழங்குவதாகக் கூறி ஒரு வீட்டில் தங்களுடனான பார்ட்டியில் கலந்துகொள்ள செய்ததாகவும் சமையலறை, படுக்கையறை உள்ளிட்ட இடங்களில் அத்துமீறி நடந்துகொண்டதாகவும், அந்தப் பெண் புகாரில் தெரிவித்திருந்தார்.