கேள்வி எழுப்பும் சாடை துரைமுருகன்
போலீஸ் ஃபைன் விவகாரத்தில் பொதுமக்கள் மட்டும் முட்டாள்களா..?
விதியை மீறி காவலர் நடந்துகொண்டதற்கு பஸ் நடத்துனர் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து தமிழகம் முழுக்க விதி மீறி பஸ் ஓட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு காவல் துறை அபராதம் விதித்தது.
இந்த நிலையில் இரண்டு துறைகளுக்குள் மோதல் ஏற்படும் சூழல் உருவானது. உடனே மேலதிகாரிகள் மட்டத்தில் இரண்டு உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதையடுத்து சம்பந்தப்பட்ட காவலரும் நடத்துனரும் நேரில் சந்தித்து இருவரும் ஒருவரையொருவர் கட்டித் தழுவி சமாதானம் ஆனார்கள்.
இதையடுத்து காவல் துறையினர் பஸ்க்கு விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்திருக்கிறாரகள். இந்த விஷயத்தில் அப்படியென்றால் இது வரை பொதுமக்களுக்கு விதிக்கப்பட்ட அபராதமும் ரத்து செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து நாம் தமிழரின் சாட்டை துரைமுருகன், ‘’மக்களை முட்டாள்கள் என நினைத்ததா தமிழ்நாடு அரசு? காவலர் நடத்துனர் மோதல் சமாதானத்தில் முடிந்த காரணத்தால் போக்குவரத்து துறையில் விதி மீறல்களுக்கு விதிக்கப்பட்ட அபராதங்களை வாபஸ் பெற்றிருக்கிறது தமிழக காவல்துறை! உங்களோடு சமாதானம் செய்து விட்டால் யார் என்ன தவறு செய்தாலும் கண்டுகொள்ள மாட்டீர்கள் அப்படித்தானே?
உங்களுக்கு வேண்டப்பட்டவர்கள் தவறு செய்தாலும் கண்டுகொள்ள மாட்டீர்கள் அப்படித்தானே? உங்களுக்கு இணக்கமாக இருந்தால் என்ன தவறும் செய்யலாம் அப்படித்தானே? உங்களுக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்தால் என்ன தவறும் செய்யலாம் அப்படித்தானே?’’ என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.
சரிதானே…