சமீபத்தில் நடந்துமுடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஏதோ கொஞ்சநஞ்ச இடங்களில் பா.ஜ.க. ஜெயித்துவிட்டது. அதனால், தாமரை தமிழகத்தில் மலர்ந்தேவிட்டது என்று அவர்கள் செய்யும் அட்டூழியம் தாங்க முடியாமல் போகிறது.
அடேங்கப்பா, பொன்னாருக்கு இத்தனை தெனாவெட்டா? தனியே நிற்பாராம்!
இந்த உள்ளாட்சித் தேர்தலில் 7 மாவட்ட கவுன்சிலர் பதவியிடங்களிலும், 85 ஒன்றிய கவுன்சிலர் பதவியிடங்களிலும் வெற்றிபெற்றது. அதிகபட்சமாக கன்னியாகுமரி, கோவை மாவட்டங்களில் தலா 2 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் வெற்றிபெற்றது. அதேபோன்று ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு, கன்னியாகுமரியில் மட்டும் 31 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
இந்த நிலையில் இன்று பேசிய பொன்னார், தனித்து நின்றே இந்த இடங்களை பா.ஜ.க. வெற்றி பெற்றிருக்கும் என்று பேசியிருக்கிறார். இதைக் கேட்டு அ.தி.மு.க.வினர் கடும் கோபத்திற்கு ஆளாகியுள்ளனர்.
அப்படியென்றால் வரும் சட்டமன்றத் தேர்தலில் தனித்து நிற்போம் என்று உறுதியுடன் இப்போதே சொல்ல வேண்டியதுதானே என்று கேள்வி கேட்கிறார்கள். என்னா, பொன்னார் காது கேட்டுச்சா?