லண்டன்: கருவில் உள்ள குழந்தை செல்ஃபி போஸ் கொடுத்த புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
தாயின் கர்ப்ப பையில் இருந்து கொண்டு செல்ஃபிக்கு போஸ் கொடுத்த சிசு..! காண்போரை மிரள வைக்கும் ஸ்கேன் புகைப்படம்!
பிரிட்டனை சேர்ந்தவர் ஜெம்மா ஹவுஸ்டன் (21 வயது). பாய்ஸ்லி பகுதியில் வசிக்கும் இவர் விரைவில் குழந்தை பெறக்கூடிய நிலையில் உள்ளார். இந்நிலையில், தனது கரு வளர்ச்சியை பரிசோதிப்பதற்காக, மருத்துவமனை சென்றவர், டாக்டரின் ஆலோசனைப்படி ஸ்கேன் செய்து பார்த்தார். அப்போதுதான் ஒரு வியப்பான சம்பவம் அவருக்கு நிகழ்ந்தது.
ஆம், ஜெம்மாவின் கருவில் வளரும் குழந்தை நன்கு முதிர்ச்சியடைந்த நிலையில் உள்ளது. விரைவிலேயே பிரசவம் நிகழலாம் எனும் நிலையில், அந்த குழந்தை ஸ்கேன் எடுப்பதை உணர்ந்து, நவீன காலத்தில் செல்ஃபி எடுப்பவர்கள் செய்வதுபோல, இரண்டு விரலை முகத்திற்கு நேராக வைத்து நாக்கை துறுத்தியபடி போஸ் கொடுத்துள்ளது. இது அப்படியே ஸ்கேனில் பதிவாக, அதனை நகல் எடுத்து பார்த்த அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர்.
பிறப்பதற்கு முன்பாகவே, இப்படி கையை அசைத்து முரட்டுத்தனமான செல்ஃபி போஸ் கொடுத்த குழந்தையின் புகைப்படம் தற்போது பலராலும் வைரலாக ஷேர் செய்யப்படுகிறது.