பிரியங்காவும் எஸ்கேப் ஆகிறார்! அடுத்த காங்கிரஸ் தலைவராகிறாரா மன்மோகன் சிங்?

நாடாளுமன்றத் தோல்விக்குப் பொறுப்பேற்று ராகுல்காந்தி, தலைமைப் பொறுப்பில் இருந்து வெளியேறி, அதில் தொடர்வது இல்லை என்பதில் பிடிவாதமாக இருக்கிறார்.


அதனால், அடுத்தபடியாக பிரியங்காவை தலைவர் ஆக்கும் பணி நடைபெற்றது. இந்த விவகாரத்தில் இருந்து இப்போது பிரியங்கா காந்தியும் எஸ்கேப் ஆகியிருக்கிறார். தலைவர் பதவிக்கு நான் போட்டியிடவில்லை என்று அறிவித்துவிட்டார். அதனால், மீண்டும் ஆரம்பித்த இடத்திலேயே காங்கிரஸ் நிற்கிறது.

இப்போது, காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கு சசிதரூர் கடுமையாக முயற்சி செய்துவருகிறார். ஆனால், சோனியாவின் எண்ணமோ, மன்மோகன் சிங்கை உட்கார வைத்தால், மீண்டும் ஒரு தலையாட்டி பொம்மை கிடைப்பார் என்று நினைக்கிறார். 

அதனால் ஆகஸ்ட் 10ம் தேதி நடைபெற இருக்கும் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் தலைவர் முடிவு உறுதியாக எடுக்கப்படும் என்று தெரிகிறது. இன்னும் மூன்று ஆண்டுகள் கூடுதல் அரசியல் பயிற்சி எடுத்துவந்து, அடுத்த தேர்தல் நேரத்தில் ராகுல் சீரியஸாக களத்தில் குதிப்பாராம்.