மோடி விழாவில் ரஜினிகாந்த்… ராகுலுக்குப் பாராட்டு?

டெல்லி குடியரசுத்தலைவர் மாளிகையில் இன்று இரவு 7.15 மணிக்கு நடைபெறும் பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றுக் கொள்கிறார். நேருவுக்கு அடுத்தபடியாக தொடர்ந்து மூன்றாவது பிரதமராகும் முதல் நபர் நரேந்திரமோடி.

டெல்லியில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக பல்வேறு நாட்டுத் தலைவர்களும் உள்ளூர் அரசியல் மற்றும் பிரபலங்களும் கலந்துகொள்கிறார்கள். இந்த விழாவில் கலந்துகொள்வதற்கு ஏர்போர்ட் வந்த ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர், “மதிப்புக்கும், மரியாதைக்கும் உரிய நரேந்திர மோடி, தொடர்ந்து மூன்றாவது முறையாக பதவியேற்க உள்ளார். இது ஒரு மிகப்பெரிய சாதனை. அவருக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள். அதேநேரம், இந்த மக்களவைத் தேர்தலில், ஒரு வலுவான எதிர்க்கட்சியைத் தேர்ந்தெடுத்துள்ளனர். இது ஜனநாயகத்துக்கு ஓர் ஆரோக்கியமான அறிகுறி” என்றார்.

பிரதமர் மோடிக்கு மட்டும் வாழ்த்துச் சொல்லாமல் எதிர்க்கட்சிக்கும் வாழ்த்து சொல்லியிருக்கிறார். இது ராகுலுக்கு ரஜினியின் பாராட்டு என்று அவரது ரசிகர்கள் பெருமைப்படுகிறார்கள். ஆனால், ‘இவர் சங்கி இல்லை என்று மற்றவர்களுக்குக் காட்ட வேண்டும் என்பதற்காகவே எதிர்க்கட்சிகளயும் பாராட்டியிருக்கிறார். மற்றபடி வேறு ஒன்றுமில்லை’ என்று அவரது எதிர்ப்பாளர்கள் விளக்கம் தருகிறார்கள்.

எப்படியோ எதிர்க் கட்சிகளை பாராட்டுவதே பெரிய விஷயம் தான்.