பக்கெட் தண்ணீரில் குளித்துவந்த சென்னை மக்கள், இப்போது கப் தண்ணீரில் குளிக்கும் அளவுக்கு நிலமை மோசமாகிக்கொண்டே வருகிறது.
சௌந்தர்யா குளிப்பதற்கு தடை போட்ட ரஜினி..! தண்ணீர் பஞ்சம் இப்பத்தான் தெரியுமாம்!
வருண பகவானும் வரமாட்டேன் என்று அடம் பிடித்துக்கொண்டு இருக்கிறான். தண்ணீர் லாரி டிரைவரை கடவுளாகப் பார்க்கும் அளவுக்கு மக்கள் மாறிவருகிறார்கள். இந்த நேரத்தில், தன்னுடைய அன்பு மகனுடன் அவரது சொந்த ஸ்விம்மிங் பூலில் குளிக்கும் படத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் ட்விட்டரில் வெளியிட்டு இருந்தார்.
அதைக் கண்டதும் நெட்டிஷன்கள் கொதித்து எழுந்துவிட்டார்கள். ஏனென்றால், ஒரு ஸ்விம்மிங் பூல் நன்றாக இருக்கிறது என்றால், இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் மாற்றவேண்டும், நாலைந்து லாரி தண்ணீராவது தேவைப்படும். அத்தனை தண்ணீர் ஊற்றி இரண்டு பேர் குளிப்பதா என்று திட்டித் தீர்த்துவிட்டனர்.
அந்த படத்தைப் போட்ட பிறகுதான் சென்னையில் தண்ணீர் பஞ்சம் இருப்பது சௌந்தர்யாவுக்குத் தெரியவந்ததாம். உடனடியாக அதனை நீக்கி கண்ணீர் பதிவு ஒன்று போட்டுவிட்டார். இந்த விவகாரம் ரஜினியின் காதுக்குப் போய்விட்டதாம். அதனால் இனிமேல் ஸ்விம்மிங் பூலில் குளிப்பதற்கு சௌந்தர்யாவுக்குத் தடை போட்டிருக்கிறாராம். தண்ணீர் பிரச்னை முடியும் வரை அதில் சௌந்தர்யா குளிக்க்க மாட்டாராம். பாவம்ல...