பாம்பிடம் சிக்கிய குஞ்சு! பாய்ந்து சென்று காப்பாற்றிய தாய் எலி! சிலிர்க்க வைக்கும் வீடியோ உள்ளே!

தனது குட்டியை தூக்கிக்கொண்ட பாம்பை விரட்டியது மட்டும் அல்லாமல் அதனிடம் இருந்து குட்டியை எலி காப்பாற்றிய சம்பவம் வைரலாகி வருகிறது.


தேசிய நெடுஞ்சாலை ஒன்றை ஒட்டிய புதர் பகுதியில எலியும், அதன் குட்டியும் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் பசியுடன் இரையை தேடி வந்த பாம்பு எலிகள் விளையாடுவதை பார்த்து குஷி ஆனது. உடனே ஓடிசென்று குட்டி எலியை கவ்வியது. இதனால் பயந்து போன தாய் தனது குட்டியை மீட்க அந்த பாம்புடன் போராடியது.

தனது முழு சக்தியையும் பயன்படுத்தி பாம்பை கடிக்கத் தொடங்கியது. ஆனாலும் பாம்பும் விடாமல் எப்படியாவது குட்டி எலியை சாப்பிட்டுவிடவேண்டும் என்று போராடியது. ஆனால் எலியின் பாசப் போராட்டத்தை பார்த்து மனம் திருந்திய பாம்பு எலிக்குட்டியை மீண்டும் விட்டது.

ஆனாலும் மீண்டும் புதருக்குள் சென்ற பாம்பை தாய் எலி விரட்டி விரட்டி சென்று கடிக்கத் தொடங்கியது. பின்னர பாம்பினால் தனது குட்டிக்கு பாதிப்பு வராது என்று தெரிந்த பிறகே அங்கிருந்து தனது குட்டியுடன் புறப்பட்டு சென்றது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது 

உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் தங்களது குழந்தைக்கு ஏதாவது ஒன்றால் எவ்வளவு பெரிய சூழ்நிலை வந்தாலும் எதிர்த்து போராடுவார்கள். இதில் விலங்கு, மனிதன் என எந்த பாரபட்சமும் இல்லை.