விளம்பர மோகத்தால் வீதிக்கு வந்துள்ளது சென்னையின் அடையாளம் என்று அழைக்கப்பட்ட சரவணா ஸ்டோர்!

சென்னையின் வர்த்தக நகரம் என்றழைக்கப்படும் தியாகராய நகரின் முடி சூடா மன்னனாக வலம் வரும் நிறுவனம்.


ரங்கநாதன் தெருவின் அடையாளம் என்றாலும். மாம்பலம் ரயில் நிலையத்திற்கு அடுத்து முதல் கடை தொடங்கி உஸ்மான் சாலை வரை பரந்து விரிந்த வியாபார சாம்ராஜ்யம் என்றால் அது சரவணா ஸ்டோர்ஸ் என்பது மெத்த பொருந்தக்கூடிய வாக்கியம் தான். சென்னையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்த நிறுவனம். தி.நகர், பாடி, குரோம்பேட்டை உள்பட பல இடங்களில் செயல்பட்டு வருகிறது.

தொலைக்காட்சியில் உள்ள அனைத்து சேனல்களின் இடைவேளை நேரத்தை ஒட்டுமொத்தமாக குத்தகைக்கு எடுத்து, தங்களது பொருட்களை நிமிடத்திற்கு நிமிடம் வாடிக்கையாளரிடம் கொண்டு சேர்க்க இவர்கள் ஒளிபரப்பும் விளம்பரங்கள் தான் இந்நிறுவனத்தின் பலம்.

தினந்தோறும் பல்லாயிரம் கோடி வர்த்தகம் நடைபெரும் இந்த நிறுவனம் அவ்வப்போது சில சர்ச்சைக்குரிய செய்திகளுக்கும் பெயர் போனது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் சரியான முறையில் வருமான வரி செலுத்த வில்லை என்ற புகாரின் அடிப்படையில் வருமான வரி சோதனை நடைபெற்றது.

சமீபத்தில் கூட சென்னை பாடியில் உள்ள இந்த நிறுவனத்தின் மேளாளரை 1 கோடி பணம் கேட்டு மிரட்டிய விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டது. கடின உழைப்பு, தன்னம்பிக்கை இருந்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு உதாரணம் தான் இந்த சரவணா ஸ்டோர்ஸ் என்று ரங்கநாதன் தெருவில் உள்ள ஒட்டுமொத்த வியாபார நிறுவனங்கள் மற்றும் ஊழியர்களின் வேதவாக்காக உள்ளது .

இந்த நிறுவனம் எந்த தொழில் தொடங்கினாலும் அது வெற்றியின் உச்சியை அடையும் என்பது பல்வேறு தரப்பினரின் நம்பிக்கை. இந்நிலையில், சென்னை சரவணா ஸ்டோர் தங்க நகைக் கடையின் பெயரில் வாங்கிய கடனை சரியான நேரத்தில் கட்டாததால் அதன் சொத்துக்களை கையகப்படுத்த கரூர் வைஸ்யா வங்கி அனுப்பியுள்ள சொத்து சுவாதீன நோட்டீஸால் அதன் உரிமையாளர்கள் கதிகலங்கி போய் உள்ளனர்.

1961ல் சிறிய மளிகைக் கடையாக ரங்கநாதன் தெருவில் தொடங்கப்பட்டு. இன்று தமிழகத்தின் முன்னனி நிறுவனமாக விளங்கி வரும் சரவணா ஸ்டோர்ஸை தொடங்கியவர்கள் சண்முக சுந்தரம், யோக ரத்தினம் ராஜரத்தினம் மற்றும் செல்வரத்திரம் சகோதரர்கள். முதலில் வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்த இந்த நிறுவனம் படிப்படியாக முன்னேறி இன்று ஒட்டுமொத்த தியாகராய நகரில் பாதிக்கும் மேற்பட்ட இடங்களில் விஸ்தரித்து வளர்ந்துள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்பு சரவணா செல்லரத்தினம் மற்றும் வெவ்வேறு பெயர்களில் கடைகள் தொடங்கப்பட்ட போது தான் இவர்களுக்குள் இருந்த சொத்துப் பிரச்சினைகள் விஸ்வரூபம் வெளி உலகிற்கு தெரிந்தது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு அவர்களுக்குள் சுமூகமாக தீர்வு ஏற்பட்ட பிறகு. சமீப காலங்களில் சரசரவென பல்வேறு இடங்களில் தனது கிளைகளை தொடங்கியது சரவணா ஸ்டோர்ஸ் குழுமம்.

இதுவரை நிறுவனத்திற்கு பலம் என்று கருதப்பட்ட விளம்பரங்களின் செலவினங்கள் தான். இன்று இந்த நிறுவனங்களுக்கு பெரும் ஆபத்தை கொண்டு வந்துள்ளது. சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் விளம்பராதார்கள் மற்றும் சரவணா ஸ்டோர்ஸ் தங்க மாளிகை மற்றும் அதன் புரோமோட்டார்கள் கருர் வைஸ்யா வங்கியிலிருந்து 162.80 கோடி ரூபாய் கடன் பெற்றுக் கொண்டு, இன்னும் திருப்பி செலுத்தவில்லை என்றும்.

சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் லிமிடெட் மற்றும் அதன் உரிமையாளர்களான பல்லக்கு துரை, சுஜாதா மற்றும் ஷிரவன் உள்ளிட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது கரூர் வைஸ்யா வங்கி.மேலும் இந்த நோட்டீஸில் குறிப்பிட்டுள்ள படியான தொகையை குறிப்பிட்ட தேதிக்குள் செலுத்துமாறும், அப்படி செலுத்த தவறும் பட்சத்தில் குறிப்பிட்ட ரங்கநாதன் தெருவில் உள்ள நகைக்கடை யின் சொத்துக்களை கையகப்படுத்த நேரிடும் என்று தெரிவித்துள்ளது கரூர் வைஸ்யா வங்கி.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு லெஜன்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள் என்பவர் சுமார் 100 கோடி முதலீடு செய்து சினிமா நடிகராக அறிமுகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. சில ஆண்டுகளாக ஒட்டுமொத்த துறைகளும் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து. அதன் காரணமாக வேலை இழப்பு மற்றும் வியாபார நஷ்டத்தில் முடங்கிப் போயுள்ள இந்த சூழலில். தமிழகத்தின் பெரும் வியாபார நிறுவனத்தின் சொத்துக்களை கையகப்படுத்த தனியார் வங்கி அனுப்பியுள்ள நோட்டீஸ். ரங்கநாதன் தெரு வியாபார நிறுவனங்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது.

மணியன் கலியமூர்த்தி