தமிழிசைக்கு அடுத்து களத்தில் கல்யாணராமன்
அண்ணாமலை மீது எக்கச்சக்க புகார்
அண்ணாமலை என்றாலே பொய் என்று அர்த்தம். பா.ஜ.க. தலைவர்களை அவமானப்படுத்துவதற்காகவே அண்ணாமலை வார் ரூம் நடத்துகிறார் என்று பா.ஜ.க.வின் தமிழக அறிவுசார் பிரிவு மாநிலத் தலைவர் கல்யாணராமன் கடுமையாக விமர்சனம் வைத்திருக்கிறார்.
அவரது விமர்சனத்தில், ‘’தமிழிசை செளந்தர்ராஜன் அண்ணாமலையின் கைப்பாவையாக செயல்படும் பா.ஜ.க.வின் வார் ரூம் ஆட்களுக்கு நேரடியாகவே எச்சரிக்கை கொடுத்தார். அந்த சலசலப்பு அடங்குவதற்குள் இன்று கல்யாணராமன் பல்வேறு விஷயங்களைப் பேசியிருக்கிறார்.
தேர்தல் தோல்வி தொடர்பாக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தர்ராஜன் மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி கூறியது சரியான தகவல். ஆனால், தேர்தல் தோல்விக்கான காரணம் குறித்து விசாரணை செய்வதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது.
போலீஸ் அதிகாரியாக 6 ஆண்டுகள் மட்டுமே பணி புரிந்த அண்ணாமலை 10 ஆண்டுகள் பணிபுரிந்ததாக பொய்யான தகவல் கூறுகிறார். பொய் சொல்வது அண்ணாமலையின் ரத்தத்திலே ஊறிவிட்டது. அண்ணாமலை தான் சார்ந்த சமூகத்தில் தன்னை பெரிய தலைவராக காட்டிக் கொள்வதற்காக எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அரசியல் செய்கிறார்.
அண்ணாமலையை முன்னிலைப்படுத்துவதற்காகவும் பிற பா.ஜ.க. தலைவர்களை சிறுமைப்படுத்தவும் 2 வார் ரூம் செயல்படுகிறது. கிருஷ்ணகுமார், அமர்பிரசாத் ரெட்டி போன்ற பலர் கட்சிப் பணத்தில் இருந்து லட்சக்கணக்கில் சம்பளம் பெறுவது மட்டுமில்லாமல் அமலாக்கத்துறை வழக்குகளில் தொடர்புடையவர்களை மிரட்டி பணம் பறிக்கிறார்கள்’’ என்று வரிசையாக குற்றச்சாட்டுகளை வீசியிருக்கிறார்.
தமிழிசை செளந்தர்ராஜன் விமர்சனத்திற்கு போலவே இதற்கும் அமைதியாக இருக்கிறார் அண்ணாமலை. அப்படின்னா சொல்றது எல்லாம் நிஜம் தானோ..?