கடல் கடந்த அன்பு! இந்திய காதலனை கரம் பிடிக்க டென்மார்க்கில் இருந்து பறந்து வந்த காதலி!

சமூக வலைத்தளத்தின் மூலம் ஏற்பட்ட காதலால் இந்தியாவிற்கு வந்து தனது காதலனை கைபிடித்த டென்மார்க்கைச் சேர்ந்த பெண். டென்மார்க்கைச் சேர்ந்த நடாசா நடாலி என்பவருக்கும் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த மல்கித் சிங் என்பவருக்கும் சமூக வலைதளத்தின் மூலம் நட்பு ஏற்பட்டது.


இதையடுத்து பல நாட்கள் இருவரும் நண்பர்களாக பழகி வந்துள்ள நிலையில் டென்மார்க் இளம்பெண்ணிற்கு மல்கித் சிங் என்பவரை பிடித்துப்போய் உள்ளது. இந்நிலையில்  நடாசா நடாலி தன் காதலை தெரிவித்துள்ளனர். இதையடுத்து இருவரும் காதலித்து வந்துள்ளனர். 

இதையடுத்து மல்கித் சிங் தன்னைப்பற்றி நடாசா நடாலியிடம் தான் போதை மருந்துகள் அடிமை ஆகியுள்ளதால் யாரும் தனக்கு வேலை கொடுக்கவில்லை எனவும் பெற்றோர்களுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக போதை மருந்துக்கு அடிமையான தாகவும் தெரிவித்துள்ள நிலையில் அவரது கள்ளங்கபடமற்ற மனதை உணர்ந்த நடாசா நடாலி அவரை திருமணம் செய்ய வேண்டும் என உறுதி செய்தார்.

இதையடுத்து இந்தியாவிற்கு வந்த நடாசா நடாலி பெற்றோர்கள் ஒப்புதலுடன் மல்கித் சிங்கை திருமணம் செய்து கொண்டு அவரை போதை பழக்கத்தில் இருந்து விடுபட போதிய சிகிச்சையை மறைத்து அவரை அதிலிருந்து விடுபட செய்தார். இதையடுத்து மல்கித் சிங்  தற்போது டென்மார்க் செல்ல விசா எடுக்க முன் வந்துள்ளதாக தெரிகிறது.

இதையடுத்து அவரை தனது சொந்த நாட்டிற்கு அழைத்துச் சென்று அங்கு அவருக்கு தனியே தொழில் தொடங்க எனது பெற்றோர்கள் உதவி செய்வார்கள் என டென்மார்க்கைச் சேர்ந்த நடாசா நடாலி தெரிவித்துள்ளார்.