கேரள மாநிலத்தில் சோலார் முறைகேடு புகாரில் தொடர்புடைய பெண் அளித்த புகாரின் பேரில் 3 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
செக்ஸ் டார்ச்சர் செய்கின்றனர்! 3 எம்எல்ஏக்கள் மீது புகார் கூறி நடிகை கதறல்!
கேரள மாநிலத்தில் வீடுகளில் சோலார் மின் அமைப்புகளை ஏற்படுத்தித் தருவதாக கூறி ஏராளமானோரிடம் கோடிக்கணக்கான ரூபாய் ஏமாற்றியது தொடர்பான வழக்கில் ஒரு பெண் மற்றும் அவரது கூட்டாளி மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி, அவரது அமைச்சரவையில் இருந்தவர்கள், இரு மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் மீது அந்தப் பெண் ஊழல் மற்றும் பாலியல் புகார் அளித்தார். உம்மன் சாண்டிக்கு எதிரான வழக்கை கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில் எர்ணாகுளம் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களான ஹிபி ஏடன், எம்.எல்.ஏ.க்களும் முன்னாள் அமைச்சர்களுமான அடூர் பிரகாஷ், ஏ.பி. அனில்குமார் ஆகியோர் மீது அந்தப் பெண் பாலியல் பலாத்காரப் புகார் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அந்த மூன்று பேர் மீதும் கேரள குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
எர்ணாகுளம் மக்களவைத்தொகுதி வேட்பாளர் தேர்வுக்கு ஏடனின் பெயரும் அட்டிங்கல் அல்லது ஆலப்புழை தொகுதிகளுக்கு பிரகாஷின் பெயரும் பரிசீலிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது இந்நிலையில் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாக ஏடன் தெரிவித்துள்ளார்.