இலங்கைப் பெண் தர்ஷிகாவின் மரணம் அடுத்தடுத்து மர்ம முடிச்சுகள் எழுவது நீதிபதிகளை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
வீட்டுக்குள் காண்டம்! ஆபாச படங்கள்! தர்ஷிகா மரணத்தில் அடுத்தடுத்து வெளியாகும் பகீர் ஆதாரங்கள்!
இலங்கை தமிழ் பெண்ணான தர்ஷிகா தனது நண்பர்கள் உறவினர்கள் அரசு வேலை என அனைத்தையும் விட்டுவிட்டு சசிகரன் என்ற நபருடன் கனடாவிற்கு காதல் திருமணம் செய்து கொண்டு வந்துள்ளார். இந்நிலையில் அவர் திடீரென கொலை செய்யப்பட்டது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
காரணம் என்னவென்றால் பதினெட்டு மாதங்களுக்கு முன்பாக தனது கணவர் தன்னை தாக்கியதாகவும், துன்புறுத்துவதாகவும் ஆதாரத்துடன் நீதிமன்றத்தில் சாட்சியங்களை முன்வைத்துள்ளார். இது கனடா ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் தனது கணவர் வைத்திருந்த பெட்டிக்குள் ஆணுறைகள், ஆபாசபடங்கள் இருந்ததாகவும் இதனால் தான் சந்தேகித்ததன் காரணமாகவும் இருவருக்கும் இடையே அவ்வப்போது சண்டை ஏற்பட்டுள்ளது.
இதனால் விரிசல் நீடித்து தனது கணவர் சோபாவிலும் தான் படுக்கை அறையிலும் உறங்கியதாக அவர் தெரிவித்துள்ளார். ஒருநாள் திடீரென இருவருக்கும் இடையே சண்டை அதிகரித்ததாக கூறிய அவர், மற்றொரு நாள் காரில் செல்லும் பொழுது ஆத்திரத்தில் தனது கையை முறுக்கி தூங்கிக்கொண்டிருக்கும் பொழுது தலையணையால் முகத்தை அமுக்கி கொலை செய்ய முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த அத்தனை சாட்சியங்களையும் மொழிபெயர்ப்பாளர் ஒருவரின் உதவியுடன் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார் தர்ஷிகா. ஆனால் தர்ஷிகாவின் சாட்சியங்கள் தொடர்ச்சியற்றதாக இருந்ததாலும், அவரது கருத்துக்கள் முன்னுக்குப்பின் இருந்ததாலும் அவர் பொய் கூறியதாக நினைத்து சசிகரனை குற்றவாளி அல்ல என்று கூறி நீதிபதி விடுவித்து விட்டார்.
இதையடுத்து தர்ஷிகா மரணம் ஏற்பட நீதிபதிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டு மீண்டும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்கிறது. இவ்வழக்கில் ஏற்கனவே செல்லும் இடங்களுக்கு எல்லாம் சசிகரன் சென்று துன்புறுத்தியதாகவும் அதற்கு ஆதாரமாக அவர் ஆங்கில வகுப்புக்கு சென்ற இடங்களில் நேரடியாக சென்று துன்புறுத்திய ஆதரங்களும் கிடைக்கப் பெற்று உள்ளது.
இதன் அடிப்படையில் நீதிபதிகள் இனி தர்ஷிகா செல்லும் இடத்திற்கு பின் தொடர்ந்து செல்ல கூடாது என்று கூறியுள்ளனர். இதை மீறும் வகையில் தொடர்ந்து அவர் பின்தொடர்ந்து சென்றுள்ள நிலையில், தர்ஷிகாவின் மரணமும் மர்மமான முறையில் இருந்திருக்கிறது. இதனால் சசிகரனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டனர்.
இதையடுத்து சசிகரன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து அவருக்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞர் கருத்து கூற மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கொண்டு வழக்கு எப்படி செல்லும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.