ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த பயணிகள்! திடீரென பற்றிய தீ! திக் திக் ஆம்னி பேருந்து பயணம்!

பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பயணிகள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.


பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் துமாகுறு என்னும் கிராமத்தின் அருகே சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தில் திடீரென என்ஜின் பகுதியில் இருந்து புகை வந்துள்ளது. இதனை கண்ட வாகனத்தின் ஓட்டுநர் பேருந்தை உடனடியாக நிறுத்தி பயணிகளை விரைவாக வெளியேறுமாறு வலியுறுத்தினார்.

ஆனால் திடீரென்று இன்ஜின் பகுதியில் ஷார்ட் சர்க்யூட் ஏற்பட்டதால் பேருந்து சட்டென்று தீப்பிடித்து பேருந்து முழுவதும் தீ வேகமாக பரவியது. அது ஒரு மேல் கீழ் பெர்த் கீழ் பெர்த் கொண்ட சொகுசு பேருந்து என்பதால் இடைஞ்சல் காரணமாக பயணிகள் வெளியேறும் பொழுது ஒருவரை ஒருவர் தள்ளிக்கொண்டு மோதிக்கொண்டு வெளியேறினர்.

இதில் மேல் பெர்த் மற்றும் முன் பகுதியில் இருந்தவர்கள் ஒருவரை ஒருவர் தள்ளிக்கொண்டு வெளியேற சிறு சிறு தீ காயங்களுடன் தப்பி விட்டனர். ஆனால் நீல்மா என்பவர் கீழ் பெர்த்தில் இருந்து கூட்டத்திற்குள் மோதி வெளியேற முடியாமல் சிக்கித் பஸ்ஸில் மாட்டிக்கொண்டார். பேருந்து தீ பிடித்ததும் துமகுரு பகுதி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து உடனடியாக விரைந்து வருவதற்குள் பேருந்து முழுவதும் தீ பரவியது.

பேருந்துக்குள் சிக்கியிருந்த நீல்மாவை மீட்க உள்ளே சென்ற தீயணைப்பு துறை அதிகாரிகள் அவரை மீட்டு வந்தனர். அப்பொழுது அவர் 50 சதவிகிதம் உடல் கருகிய நிலையில் மீட்கப்பட்டார்.இதையடுத்து துமகுறு அரசு மருத்துவமனையில் நீல்மா உட்பட காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

அதன்பின் நீல்மா ஆபத்தான நிலையில் இருப்பதை உணர்ந்து அவரை பெங்களூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்பொழுது அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த தீ விபத்து அப்பகுதியில் அதிகாலை 4.45 மணியளவில் நடைபெற்றதாக கூறப்படுகிறது. மேலும் காவல் துறையினர் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தினால் பயணிகள் தற்போது வரை பெரும் பீதியில் உள்ளனர்