வளர்த்தவரை கொன்று தின்று ஏப்பம் விட்ட18 நாய்கள்! பதைபதைக்க வைக்கும் கொடூரம்.

வளர்த்த உரிமையாளரையே நாய்கள் கடித்து தின்று ஏப்பம் விட்ட கொடூரச் சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.


டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள வீனஸ் என்ற பகுதியில் வசித்து வந்தவர் ஃப்ரடி மேக். விலங்குகள் மீது அதிக அன்பு கொண்ட இவர் வெவ்வேறு வகை இனத்தைச் சேர்ந்த 18 நாய்களை தனது வீட்டில் வளர்த்து வந்தார். 57 வயதான மேக் தனது நாய்களுடன் வீட்டில் தனியாக பொழுதைக் கழித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் முதல் அவரை காணவில்லை என்று உறவினர்கள் காவல் துறையில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் அவரை தேடி வந்த போலீசாருக்கு எந்த தடயமும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் ஒருமுறை வீடு முழுவதும் அவர்கள் சோதனையிட்டபோது நாய்களின் மலத்தில், முடி, துணி, எலும்பு ஆகியவை இருந்தன.

இவற்றைக் கண்ட போலீசார் நாயின் மலத்தை டிஎன்ஏ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் முடிவு இருக்கையில் மலத்தில் இருந்த முடி துணிகளும் ஆகிய அனைத்தும் மேக் உடையது என்பது உறுதியானது. இதனால் போலீசார் அதிர்ச்சியில் உறைந்து போயினர். வளர்த்த உரிமையாளர் ஒருவேளை இறந்து போயிருக்கலாம் என்றும் அதன்பிறகு நாய்கள் அவரை தின்று இருக்கலாம் என்றும் போலீசார் கூறுகின்றனர்.

அதேவேளையில் நாய்கள் தமது உரிமையாளரை கடித்துக் குதறி கொன்று பின்னர் தின்று இருக்கலாம் என்றும் சந்தேகம் எழுந்துள்ளது. அவர் வளர்த்த நாய்கள் அனைத்தும் மிகவும் ஆக்ரோஷமாக காணப்படும் நாய்கள் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவமானது டெக்ஸாஸில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.