ஸ்கூட்டியில் சிட்டாக பறந்த இளம் ஆசிரியை! டூ வீலரை ஓவர் டேக் செய்ய முயன்ற போது நிகழ்ந்த விபரீதம்!

இருசக்கர வண்டியில் பள்ளிக்கு செல்லும் ஆசிரியர் தலையில் தலைக்கவசம் அணியாததால் விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


தேனி மாவட்டத்தில் PC  பட்டியில் உள்ள தீபா(28).இவர் தேனி மாவட்டத்தில் உள்ள என்.ஆர்.டி நகரில் அமைந்துள்ள பொன்ராஜா பள்ளியில் தமிழ் ஆசிரியராக வேலை செய்து வருகிறார்.

மேலும் இவர் தினமும் பள்ளிக்கு ஸ்கூட்டியில் தான் பள்ளிக்கு செல்வார்.கட்டாயமாக ஹெல்மெட் அணிந்து கொண்டு தான் செல்வார்.ஒரு நாள் பள்ளி முடித்துவிட்டு வீட்டுக்கு சென்றார் தீபா.அப்போது வார சந்தையில் கூட்டம் அதிகமாக இருந்தது.

அப்போது தீபாவின் ஸ்கூட்டிக்கு முன் இன்னொரு வண்டி சென்று கொண்டிருந்தது.மேலும் அவர் அந்த வண்டியை கடந்து போக நினைத்த போது திடீரென தவறி கீழே விழுந்தார். அப்போது அந்த நேரத்தில் அவர் ஸ்கூட்டிக்கு பின் வந்த ஒரு பள்ளி வாகனம் தீபாவின் தலையிலேயே ஏறி இறங்கியது.

இதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் தீபா.

இது குறித்து உடனடியாக தேனி மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அவர்கள் விரைந்து வந்து தீபாவின் உடலை  தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விசாரணை மேற்கொண்ட போலீசார் பள்ளி வாகன டிரைவர் சதீஷ்குமாரை கைது செய்தனர். ஹெல்மெட் அணிந்தும் தீபா தலை நசுங்கி உயிரிழந்தார்.