அக்காள் தமிழிசையின் வயது 63. தம்பி அமித் ஷாவுக்கு 59

இப்படியொரு கேவலம் தேவையா அக்கா..?


பொதுமேடை. ஒவ்வொரு காட்சியையும் வீடியோ பதிவு செய்கிறது என்பது தெரிந்தே அமித் ஷா தமிழிசையை விரல் நீட்டிக் கூப்பிட்டு கடுமையாக எச்சரிக்கை செய்கிறார். அதற்கு கோபம் காட்ட வேண்டிய தமிழிசையோ பம்முகிறார்.

அது மட்டுமின்றி இந்த விவகாரம் குறித்து, ‘மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு ஆந்திர முதலமைச்சர் சந்திபாபு நாயுடுவின் பதவியேற்பு விழாவில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை முதன்முதலாக நேற்று சந்தித்தேன். தேர்தலில் நான் எதிர்கொண்ட சவால்கள் குறித்து கேட்பதற்காகவே அமித்ஷா என்னை அழைத்தார்.

நான் விவரித்துக் கொண்டிருந்த போது, நேரமின்மையால் மிகுந்த அக்கறையுடன் அமித்ஷா அவர்கள் அரசியல் மற்றும் தொகுதிப் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள அறிவுரை கூறினார். தேவையில்லாத சர்ச்சைகளையும் யூகங்களையும் தெளிவுபடுத்தவே இந்த விளக்கம்” என்று விளக்கம் கொடுத்திருக்கிறார்.

இப்படியொரு அவமானத்துடன் பதவி வாங்க வேண்டுமா? அந்த கட்சியில் இருக்கத்தான் வேண்டுமா என்று பலரும் கேள்வி எழுப்பிவருகிறார். இதோ அப்படியொரு பதிவு.

தமிழிசையின் அப்பா தேசிய தென்றல், இலக்கியசெல்வர் குமரி அனந்தன். தமிழிசை அவர்களின் தந்தை வழி தாத்தா ஹரிகிருஷ்ணன் அவர்கள் வில்லிசை கலை மூலம் தேசியத்தையும் தெய்வீகத்தையும் பாமர மக்களிடம் கொண்டு சேர்த்தவர்.

அம்மா வழி தாத்தா வடக்கன்குளம் சங்குமுத்து நாடார் இந்தியா இலங்கை அறிந்த மிகப்பெரிய வணிகர், அக்காலத்திலேயே திரைப்படம் தயாரித்தவர்.

உலகில் தினகாலண்டர் என்பதை அறிமுகப்படுத்தியவர். அதுதான் ஸ்ரீ மகள் காலண்டர் . அரிய பல நூல்கள் வெளியிட்டவர். பெரும் காந்திய தொண்டர் காமராஜரின் நெருங்கிய சகா.

தந்தையோ இந்தியளவில் அறியப்பட்ட தேசியத் தலைவர். பல பதவிகளை வகித்தவர். குறிப்பாக மது ஒழிப்பு போராளி. கங்கை காவிரியை இணைக்க வேண்டும் என்று பெரு முயற்சி எடுத்தவர் .பல தேர்தல்களில் வெற்றி பெற்றவர். களவீரர். இலக்கியவாதி, காந்தியவாதி, காமராசரின் சீடர் இப்படியான குடும்பப் பின்னணி கொண்டவர்.

இவருடையச் சித்தப்பா வசந்தகுமாரும் சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் என பல வெற்றிகளைக் கண்டவர். நாடாளுமன்ற உறுப்பினராகத்தான் மறைந்தார். கல்வி அறிவில் பார்த்தால் தமிழிசை படித்து பட்டம் பெற்ற மருத்துவர். அவருடையக் கணவரும் புகழ்பெற்ற மருத்துவர். இதற்கெல்லாம் பின்னால் வருவதுதான் கட்சியால் வழங்கப்பட்ட துணை ஆளுநர், ஆளுநர் பதவிகளெல்லாம் ...

அமித்ஷாவுக்கு வயது 59. கல்வியறிவு பூஜ்யம். அடுத்தவன் ரத்தத்தை உறிஞ்சி வாழும் வட்டிக்கு விடும் மார்வாடி. இவனுக்கும், இவனுடைய மகனுக்கும் ஆங்கிலம் சுட்டுப்போட்டாலும் வராது. ஆங்கிலம் மட்டுமே அறிவு அல்ல. ஆனால் காமராஜர், கலைஞர், எம் ஜி ஆருக்கெல்லாம் ஆங்கிலம் நன்கு தெரியும் !

ஆக, வயதிலும், கல்வியிலும், அரசியல் பாரம்பரியத்திலும் தமிழிசையின் கால் தூசி பெறாத , ஏதோ அதிர்ஷ்டக் காற்று அடித்ததால் கோபுரத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும் குப்பையை போன்றவன் அமித்ஷா, கால் மேல் கால் போட்டுக் கொண்டு, தமிழிசையை அலட்சியமாக அழைப்பதென்ன? சுட்டுவிரல் காட்டி, கண்களை உருட்டி ஒரு பொதுவெளியில் எச்சரிப்பதென்ன ? சமரசச் சொற்களை செவிகொடுத்து கேட்காமல் அசிங்கப்படுத்துவதென்ன ??

இப்படி பட்ட செயலை இவன் தன் கட்சியைச் சார்ந்த ஒரு பிராமண பெண்ணிடம் காட்டிவிட முடியுமா? இனியும் அந்த கட்சியில் இருக்க வேண்டுமா? என்று கேள்வி எழுப்புகிறார்கள்.

தமிழிசை பதில் சொல்லத்தான் வேண்டும்.