தஞ்சாவூரில் பாரம்பர்யமிக்க குடும்பம் என அனைவராலும் அறியப்பட்டது பூண்டி துளசி அய்யா வாண்டையார் குடும்பம்.
காங்கிரஸ் கட்சிக்காரரின் சம்பந்தியாகிறார் டி.டி.வி.தினகரன்..! இதுல ஏதாவது அரசியல் இருக்குதா..?
இவர் மகன் கிருஷ்ணசாமி வாண்டையார், காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பதவிகளை வகித்தவர். தற்போதும் காங்கிரஸ் கட்சியின் தஞ்சாவூர் தெற்கு மாவட்டத் தலைவராகவும் உள்ளார்.
இவருடைய மகன் ராமநாதன் துளசிஅய்யா தற்போது இளைஞர் காங்கிரஸ் கட்சியின் தமிழக ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்காக பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தினகரன்-அனுராதா மகளான ஜெயஹரிணிக்கும் ராமநாதன் துளசிஅய்யாவுக்கும் திருமணம் செய்வதற்கு பேசி முடிக்கப்பட்டுள்ளது. சசிகலா சிறையிலிருந்தபடியே தன் உறவுகள் மூலம் இந்தத் திருமணத்தை பேசி முடித்திருக்கிறார்.
சசிகலா வெளியே வந்தபிறகுதான் திருமணம் நடைபெறும் என்று தெரியவருகிறது. இந்த உறவு அரசியலிலும் தொடருமா என்று கேட்கப்படுகிறது. ஏனென்றால், ஒரு வேளை காங்கிரஸ் கட்சியை தி.மு.க. சட்டமன்றத் தேர்தலில் கழட்டிவிட்டால், காங்கிரஸ் அ.ம.மு.க. கூட்டணி உருவாகுமாம்.