டாக்டர் ராமதாஸ்க்கு 80ம் ஆண்டு பிறந்த நாள் விழா மிகவும் பிரமண்டமாக கடந்த வாரம் கொண்டாடப்பட்டது.
ராமதாஸ் காலடியில் சரண்டரான காடுவெட்டி குருவின் மகன் கனலரசன்! பாமகவில் திகுதிகு!
வன்னிய கட்சியாக தொடங்கிய காலம் முதல் இன்று வரை பிரிந்துபோன அனைவரையும் எப்படியாவது அழைத்துவந்து அய்யாவின் பெருமையைப் பேசவைக்க வேண்டும் என்று பா.ம.க. தீவிரமாக வேலை செய்தது. அந்த வகையில் பழைய ஆட்கள் அனைவருக்குமே அழைப்பிதழ் அனுப்பப்பட்டது. அது மட்டுமின்றி, ‘இது அரசியல் விழா கிடையாது என்பதால் மாற்றுக் கட்சியினர், மாற்று கருத்து உள்ளவர்கள் அனைவருமே கலந்துகொள்ள வேண்டும் விரும்பி அழைத்தனர்.
அதையடுத்து பா.ம.க.வில் இருந்து விலகிப்போன தீரன் மட்டும் இந்த விழாவில் நேரடியாக வந்து கலந்துகொண்டார். அவரைத் தவிர பிரிந்துபோன யாரும் வரவில்லை, ஏனென்றால், இதையும் அரசியலாக்கி விடுவார்கள் என்று பயந்தார்கள். அப்படித்தான் ஆகிப்போனது கனலரசன் சந்திப்பு. காடுவெட்டி குருவின் மகனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த நேரத்தில் சண்டை, சச்சரவு எதுவும் வேண்டாம், ஒரு முக்கிய விழா என்பதால் நேரில் வரவேண்டும் என்று அழைப்பு மேல் அழைப்பு கனலரசனுக்குக் கொடுக்கப்பட்டது.
அதனால், வேறு வழியின்றி கனலரசனும் நேரில் ராமதாஸை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார். உடனடியாக, அந்த புகைப்படத்தை மீடியாக்களுக்கும் பத்திரிகைக்கும் அனுப்பி, ராமதாஸ் பக்கம் காடுவெட்டி குருவின் மகன் சாய்ந்துவிட்டார் என்று அனுப்பிவிட்டார்கள்.
நல்லவேளை, நான் தப்பிச்சுட்டேன் என்று வேல்முருகன் இப்போது சந்தோஷப்படுகிறாராம். பின்குறிப்பு : ராமதாஸின் 80ம் ஆண்டு பிறந்த நாள் விழாவுக்கு அவரது கூட்டணியில் இருந்து விஜயகாந்த், பா.ஜ.க. பெரும்புள்ளிகள் யாரும் வாழ்த்து சொல்லவில்லை என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.