தமிழகத்தில் பொங்கல் நேரத்தில் 600 கோடி ரூபாய்க்கு டாஸ்மாக் விற்பனை நடைபெற்றது என்பதைக் கேள்விப்பட்டு எனக்கு வயிறே கொதித்தது என்று ராமதாஸ் பேசியதாலோ என்னவோ, டாஸ்மாக் கடைகளை மூடும் உரிமை உள்ளாட்சி அமைப்புக்கு கொடுக்க வேண்டும் என்ற நீதிமன்றத் தீர்ப்பை விஜயகாந்த் வரவேற்றுள்ளார்.
மதுக் கடைகளுக்கு எதிராக விஜயகாந்த்..! தே.மு.தி.க.வில் திகுதிகு மாற்றம்.
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளினால் பொதுமக்கள் அதிக அளவில் பாதிக்கபடுவதினால் அரசியல் அமைப்பு சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் கிராம பஞ்சாயத்து தலைவர் தீர்மானம் நிறைவேற்றியத்தை ஏற்று தமிழக அரசு சட்டம் கொண்டுவர உயர்நீதி மன்றம் கருத்து தெரிவித்துள்ளதை தேமுதிக சார்பில் வரவேற்கிறோம்.
தமிழக அரசு பொதுமக்கள் மற்றும் இளைஞர்களின் நலன் கருதி உள்ளாட்சி அமைப்புகளில் கீழ் டாஸ்மாக் கடைகளை முறைப்படுத்தவும், கால நேரத்தை வரையறை செய்யவும் இதுபோன்று சட்டம் கொண்டு வருவதன் மூலம் நமது காலாச்சாரம், இளைஞர்களின் எதிர்காலம், பெண்களின் பாதுகாப்பு போன்றவை பாதுகாக்கப்படும்.
மேலும் பாலியல் வன்கொடுமை, சாலை விபத்துக்கள் குறைவதற்கான வாய்ப்புக்கள் உள்ளது. எனவே தமிழக அரசு உயர்நீதிமன்றத்தின் கருத்தை ஏற்று உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று விஜயகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார். குடியால் பாதிக்கப்பட்டவர் என்பதால், அவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்.