இடைத்தேர்தல் நடைபெற 2 நாட்களே உள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரம் 3 தொகுதிகளிலும் சூடு பிடித்துள்ளது. ஆளுங்கட்சியினரும், எதிர்கட்சியினரும் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை வைத்த பரஸ்பரம் குற்றம்சாட்டி வருகின்றனர்.
குரு உடம்பை சொந்த ஊருக்கு கொண்டு போக கூட காசு கொடுக்காதவர் ராமதாஸ்! அதிர்ச்சி தகவல்!
அதிமுகவுடன் பாமக கூட்டணி வைத்து தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள இந்த பரபரப்பான சம்பவத்திற்கு இடையே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கவுன்சிலராக இருக்கக் கூட தகுதியற்றவர் என அன்புமணி ராமதாஸ் பேட்டியளித்த வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
இதற்கிடையே விக்ரவாண்டியில் பிரச்சாரத்தில் பேசிய அரக்கோணம் எம்.பி.ஜெகத்ரட்சகன், மருத்துவர் ராமதாஸ் வன்னியர் சமுதாய மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.
பாமக வளர்வதற்கு முக்கிய காரணமாக இருந்த காடுவெட்டி குரு உயிரிழந்தபின் அவரது உடலை வீட்டிற்கு கொண்டுசெல்லக்கூட பணம் இல்லாமல் அந்த குடும்பம் தவித்தது. அவர்களுக்கு ராமதாஸ் பணம் கொடுத்து அந்த சமயத்தில் உதவவில்லை. அவரது மருத்துவ செலவாக 3 லட்சம் ரூபாயை நான்தான் கொடுத்தேன் என ஜெகத்ரட்சகம் ஆவேசமாக பேசினார்.
காடு வெட்டியின் குடும்பம் இன்று வறுமையில் வாடுகிறது. இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்த 21 குடும்பங்கள் இன்றும் வறுமையில்தான் தத்தளிக்கிறது. அவர்களுக்கு ராமதாஸ் எதுவுமே செய்யவில்லை என பகிரங்கமாக குற்றம்சாட்டினார் ஜெகத்ரட்சகன்.
உண்மையிலேயே வன்னிய மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செய்தவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிதான் என பேசினார் ஜெகத்ரட்சகன். ராமதாசும், அவரது மகன் அன்புமணியும் திமுக மீதும், கருணாநிதி, ஸ்டாலின் மீதும் பொய்யான, ஆதாரமற்ற அவதூறுகளை அள்ளி வீசி வருவதாக திமுக தொண்டர்கள் கொந்தளிக்கின்றனர்.
வன்னியர்கள் மத்தியில் இழந்த செல்வாக்கை மீட்டெடுப்பதற்காகவே திமுக மீது கண்மூடித் தனமான தாக்குதலை தந்தையும் மகனும் மேற்கொண்டு வருவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். “திமுகவை விமர்சிப்பதில் தவறில்லை. ஆனால், அடிப்படை ஆதாரமற்ற அவதூறுகளை விமர்சனமாக அள்ளி வீசும் போது, அதை வீசுபவர்கள் மீதான நம்பகத்தன்மைதான் கேள்விக்குறியாகி விடும்” என மூத்த பத்திரிகையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.