தமிழ் மீது தீராத காதல்! தமிழரை மணந்து பிரிட்டன் இளம் பெண் வெளியிட்ட வீடியோ!

தமிழரை திருமணம் செய்துகொண்ட பிரிட்டன் நாட்டு பெண் தமிழில் பாடி வெளிவந்த வீடியோ அனைவரையும் கவர்ந்து தற்போது வைரலாகி வருகிறது.


பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த சமந்தா ரேயன் என்பவர் தமிழகத்தை சேர்ந்த கண்ணன் என்பவரை காதலித்து முறைப்படி திருமணம் செய்து கொண்டார். தமிழ் மீது தீராத ஆர்வம் கொண்ட இவர் கண்ணனின் குடும்பத்தினரிடம் பேசுவதற்காக தமிழை ஆர்வமாக கற்று வருகிறார். 

இந்நிலையில் பாசமலர் திரைப்படத்தில் வெளிவந்த 'மலர்ந்தும் மலராத' என்னும் பாடலை தமிழில் பாடி அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது மிகவும் வைரலாகி வருகிறது.

இது மட்டுமல்லாமல் இன்னும் சில பாடல்களையும் இவர் தமிழில் பாடி வெளியிட்டிருக்கிறார்.