பேம்பர்ஸ் கூட கழட்டல..! விராட் கோலி ஷாட் ஆடும் அதிஷய குழந்தை! கிரிக்கெட் வீரர்களையே மிரள வைக்கும் வீடியோ!

கிரிக்கேட் என்றாலே இன்றைய இளசுகள் மத்தியில் பெரும் குஷியை ஏற்படுத்த மந்திரச்சொல் தான்.


அதிலும் நம்ம ஊரு சில்லு முதல் பெரியவர்கள் வரை , எல்லோருக்கும் பிடித்தமானதே இந்த கிரிக்கெட் எனலாம், அதிலும் கிரிக்கெட் விளையாட்டை நினைவுக்கூராத குழந்தை பருவம் இருக்க வாய்ப்பே இல்லை . 

இந்த நிலையில் சமூக வலைதளத்தில் பேம்பர்ஸ் உடன் ஒரு சிறுவன் கையில் கிளவுசுடன் கிரிக்கெட் பேட்டை வைத்து வீசப்படும் பந்துகளை சிக்ஸர் அடித்து நொறுக்கும் வீடியோ காட்சிகள்,  அதிலும்.ஒருமுறை அல்ல தொடர்ந்து எத்தனை முறை பந்துகள் வீசினாலும் தொடர்ந்து பந்துகளை சிக்ஸர் அடித்து பட்டையள கிளப்புகிறார் அந்த சிறுவன். 

இணையத்தில் வெளியாகி பெரும் வைரலாகி வருகிறது. இன்னும் பேம்பர்ஸ் கூட கழட்டாத சின்ன சிறுவன் இவ்வளவு நேர்த்தியாக பந்தை அடித்து விளையாடும் காட்சிகள், இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் அடுத்த சூப்பர் ஸ்டார், அணியின் கேப்டன் விராட், தோனி என இணையத்தில் சிறுவன் கொண்டாடப்பட்டு வருகிறான் .