ஓபிஎஸ் திடீர் டெல்லி பயணம் ஏன்? அரசியலை பரபரப்பாக்கும் அதிரடி பின்னணி!

துணை முதலமைச்சரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ பன்னீர்செல்வம் திடீரென டெல்லி புறப்படுவதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.


நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியானவுடன் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல் அமைச்சருமான ஓ பன்னீர்செல்வம் டெல்லி புறப்பட்டு சென்றார். தனது மகன் ரவீந்திரனாத்துக்கு மத்திய அமைச்சரவையில் இடம் பெற்று விட வேண்டும் என்று கடைசிவரை ஓ பன்னீர்செல்வம் கூறினார். ஆனால் எடப்பாடி தரப்பு நெருக்கடி காரணமாக ஓபிஎஸ் மகனுக்கு அமைச்சரவையில் இடம் அளிக்கப்படவில்லை.

இதனைத் தொடர்ந்து அதிமுக மேல் இடத்திற்கும் பாஜக மேலிடத் இருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. ஓ பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் அதற்கு மத்திய அமைச்சரவையில் இடம் கொடுக்க பிரதமர் மோடியை விரும்பியதாகவும் ஆனால் அதனை எடப்பாடி தரப்பு தடுத்து நிறுத்தியதை பாஜக மேலிடம் வரவில்லை என்றும் தகவல் வெளியானது.

இதனைத்தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் விரைவில் தமிழகத்தில் ஆட்சிக்கு வரலாம் என்றும் தகவல்கள் பரவின. ஆனால் டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடி உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரை சந்தித்துப் பிரச்சினையைச் எடப்பாடி சரி செய்து விட்டதாகவும் சொல்லப்பட்டது.

ஆனாலும் கூட தற்போது வரை எடப்பாடி தரப்புக்கும் டில்லிக்கும் இடையே சுமூகமான உறவு ஏற்படவில்லை. இந்த நிலையில் ஓ பன்னீர்செல்வம் டெல்லி செல்வது தானாக விரும்பி அல்ல மேலிடத்தில் இருந்து அழைப்பு வந்து உள்ளதாக சொல்கிறார்கள். தமிழகத்தில் அதிமுக வில் இரட்டை தலைமை கூடாது என்கிற முடிவில் அக்கட்சியை இயக்கும் சீராக இருப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில் முதலமைச்சர் பதவியில் எடப்பாடியை வைத்துவிட்டு கட்சியின் பொதுச் செயலாளராக பன்னீர்செல்வத்தை கொண்டுவர ஒரு மிகப்பெரிய திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இது குறித்து பேசவே போ பன்னீர்செல்வத்திற்கு டெல்லியில் இருந்து உடனடியாக அழைத்து வந்ததாக சொல்கிறார்கள். நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்து பட்ஜெட் குறித்து பேசவே நிதியமைச்சரான ஊத்தி செல்வதாகவும் கூறப்படுகிறது. ஆனால் நிதித்துறையை தன்வசம் ஓபிஎஸ் வைத்திருந்தாலும் அது தொடர்பான கூட்டங்களில் ஜெயக்குமார் பங்கேற்பதுதான் கடந்த காலங்களில் வழக்கமாக இருந்துள்ளது.

எனவே ஓபிஎஸ் டெல்லி செல்வது நிச்சயமாக நிதி அமைச்சகம் தொடர்புடைய விஷயத்திற்காக அல்ல என்று அடித்துக் கூறுகிறார்கள் அவரது ஆதரவாளர்கள். விரைவில் அதிமுக பொதுக்குழு கூட்டம் கூடும் என்றும் அப்போது பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிக்கப்படும் என்றும் அந்தத் தேர்தலில் போட்டியின்றி ஓபிஎஸ் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் கூறி வருகிறார்கள்.

மேலும் ஒரு சில எம்எல்ஏக்கள் திமுக தரப்பில் தொடர்பில் இருப்பதாகவும் அவர்களை சமாதானம் செய்வது அல்லது அச்சுறுத்துவது குறித்து பேசவும் ஓபிஎஸ் டெல்லி செல்வதாக பேச்சுக்கள் அடிபடுகின்றன. இதனால் தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.