காந்தி மீதான பார்வை சிலருக்கு மாறுவது ஏன்? - கே.எஸ். ராதாகிருஷ்ணன்!

காந்தி மீதான பார்வை சிலருக்கு மாற என்ன காரணம்? " என் வாழ்க்கையே எனது செய்தி" என்று சொன்ன மகாத்மாவின் 150 வது பிறந்த தினம் இன்று.


அகிம்சையை வாழ்நாள் முழுவதும் கடைப் பிடித்து வாழ்ந்த மகாத்மாவுக்கு வாழ்த்துக்கள்!

காந்தி வாழ்வு துவங்கி 150 ஆண்டுகள் கடக்கும் இந்தத் தருணத்தை நாடும்,அரசும், மட்டுமல்ல,ஊடகங்கள்,கல்வி நிறுவனங்களும் கொண்டாடிக் கொண்டிருக்கின்றன. காந்தியின் எழுத்துக்கள்,பேச்சுக்கள், போராட்டக் களமான அவருடைய வாழ்க்கை என்று அனைத்துமே மறுவாசிப்புக்கு உள்ளாகியிருக்கின்றன.

தங்களைச் சுற்றியிருக்கிற அரசியல்வாதிகளை முதலில் நம்பிப் பிறகு சரிந்த இளைய தலைமுறை காந்தியைப் போன்று வெளிப்படையாக வாழ்ந்தவர்கள் மீதான நம்பிக்கையை மீட்டெடுத்துக் கொண்டிருக்கிறது. 

இதெல்லாம் காலம் நிர்பந்தமாக உருவாக்கிய மாற்றம் என்று சொல்லலாம். ஆனால் இதில் ஒரு வினோதம்.

காந்தியைப் பற்றிக் கடுமையான,தரக்குறைவான விமர்சனத்தை முன் வைத்த ,எனக்குத் தெரிந்த மூத்த அரசியல் பிரமுகர் தன் வாழ்நாளில் பெரும்பகுதியை அதற்குச் செலவழித்திருக்கிறார்.தற்போது காந்தியைப் பற்றிய இதுவரையிலான பார்வையை மாற்றி, காந்தியின் சிந்தனைகளைப் போற்றுகிறார்.

காந்தியத்தைக் காலத்தின் தேவைக்கேற்ப மீட்க வேண்டும் என்று இவரைப் போலவே, அறிவுஜீவி எழுத்தாளர்களும் காந்தியைக் கொண்டாடுகிறார்கள்.தூக்கிப் பிடிக்கிறார்கள்.இது காந்தியப் பார்வைக்குக் கிடைத்த வெற்றியாகச் சிலர் கருதலாம்.அதே சமயம் அவர்கள் எந்த நோக்கத்தோடு காந்தியத்தை மாற்றாக முன்வைக்கிறார்கள்?

மத்தியில் இருக்கும் பா.ஜ.க அரசு மீதும், மீதும் இருக்கிற வெறுப்புணர்வு காரணமாக, அதற்கு மாற்றாக காந்தியத்தை முன் வைக்கிறவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.

காந்தியம் சுய ஆளுமையுள்ள, எந்த ஆதிக்கச் சார்பற்ற கொள்கை. அதைத் தங்களுடைய அரசியல் தேவைக்கேற்ற தீனியைப் போலப் பயன்படுத்துவது நல்லதொரு அணுகுமுறை அல்ல.

Remembering the Man who made his own clothes. He didn't fear criticism. He didn't fear failures. He pursued his goal doggedly. And in that pursuit, he took everyone along with him. 150th Birth anniversary Mahatma...

உத்தமர் காந்தியின் பிறந்த நாள். அரசியல் சூழலில் உத்தமர் காந்தி பதவிகளை ஏறெடுத்தும் பார்க்காதவர். நம்முடைய சிந்தனைக்கு, அவரே தேர்தலில் இன்று போட்டியிட்டாலும் காசு கொடுத்துதான் வாக்குகளை வாங்க முடியும். வாழ்க உத்தமர் காந்தியின் புகழ். 

இவரிடம் கற்றதும் பெற்றதும் ஏராளம். இவரைப் பற்றி வரலாற்றுப் பக்கங்களில் முரண்பட்ட தகவல்களை ஏராளமாகப் படித்தாலும்,படித்துக்கொண்டேயிருந்தாலும் இவர் உண்மையிலே உத்தமர்தான். அடுத்த நூற்றாண்டுக்கும் இந்தியாவிற்கு தேவைப்படுபவராகத்தான் இருப்பார்.