ராமநாதபுரம்: அண்ணியுடன் நெருக்கமாக இருக்க இடையூறு செய்த மனைவியை கணவன் கொன்ற சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
மனைவியை ஓரம் கட்டி அண்ணியுடன் நெருங்கிய கணவன்..! தட்டிக்கேட்டதால் வீட்டில் ஏற்பட்ட பூகம்பம்!
ராமநாதபுரம் மாவட்டம், பனைகுளம் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முனீஸ்வரன். இவருக்கு, 3 ஆண்டுகளுக்கு முன் தனலெட்சுமி என்பவருடன் திருமணமாகி, 2 வயதில் பெண் குழந்தையும் உள்ளது. திருமணமானதும் வெளிநாட்டில் சென்று வேலைபார்த்து வந்த முனிஸ்வரன் சமீபத்தில் நாடு திரும்பினார். ஆனால், அவர் சம்பாதித்த பணம், தங்க நகைகள் என அனைத்தையும், அவரது அண்ணியிடம் கொடுத்து வைத்துள்ளார்.
மனைவிக்கு காசு தராததால், அவர் குடும்பம் நடத்தவே கடுமையாக கஷ்டப்பட்டுள்ளார். இதுமட்டுமின்றி, அண்ணிக்கும், முனிஸ்வரனுக்கும் நெருக்கமான உறவு இருந்துள்ளது. இதனையும் அவர் மனைவி கண்டித்திருக்கிறார். இதையடுத்து, ஆத்திரம் அடைந்த முனிஸ்வரன் மனைவியை கழுத்து நெறித்துக் கொன்றுவிட்டார். ஆனால், போலீசிடம் வேறு ஒரு காரணத்தைச் சொல்லி சரணடைந்தார். விசாரணையில் தற்போது இந்த உண்மைகள் தெரியவந்துள்ளன. முனிஸ்வரனின் ஒழுங்கீன செயலால் அவரது 2 வயது மகள் தற்போது ஆதரவின்றி தவிக்கும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.